பட்டதாரி நியமனம் பெற்றவர்களுக்கான பணிகள் பற்றிய விபரம்

“சுபீட்சத்திர்க்கான நோக்கு” என்ற கொள்கைப் பிரகடனத்தின் படி ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ அவர்களினால் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனம் முதல் கட்டமாக 23000 பேருக்கு இம்மாதம் வழங்கப்பட்டது. எனினும் தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்ட இவ் நியமனம் கொரோனா தொற்றினால் பிற்போட்டதனாலும் தேர்தல் வரும் அக்டோபர் மாதமே நடத்த சாத்தியமுள்ளதனாலும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த வேலை வாய்ப்பினை அரசாங்கம் தற்பொழுது நிலவி வரும் கொரோனா covid 19 என்ற தொற்றிலிருந்து அனைத்து மக்களையும் பாதுகாக்கவேண்டிய இக்கட்டான நிலமைக்குள் உள்ளது இதற்கென தேவைக்கு அதிகமான பட்டதாரிகளை தலைமைத்துவப் பயிற்சி என்ற ரீதியில் உள்வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஜனாதிபதியின் விசேட அதிகாரத்தின்படி முன்னர் நியமனக்கடிதம் வழங்கப்பட்ட முதல் கட்ட பட்டதாரிகள் சுமார் 23000 பேரை பிரதேச செயலகங்களினூடாக அப் பிரதேச சுகாதார தினைக்களங்களிர்க்குள் உள்வாங்கப்படவுள்ளதுடன் அவர்களுக்காக ஏற்கனவே வழங்கப்படவிருந்த கொடுப்பனவினையும் வழங்கி அவர்களை எதிர்வரும் திங்கள் 30.03.2020 முதல் குறித்த வேலையினை ஆரம்பிக்க பணிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஜனாதிபதியினால் பசில் ராஜபக்ச அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே மாவட்டட ரீதியாக இவ் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க இதன் கீழ் வேலையற்ற பட்டதாரிகள் இணைக்கப்படவுள்ளனர்.

முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்டுள்ள பட்டதாரிகள் சுமார் 23000 பேர் வரையில் இதில் உள்ளடங்குவர்.இவ் திட்டத்திற்கு வேலையற்ற பட்டதாாிகள் அனைவரும் பிரதேச செயலாளா் ஊடாக தமக்கு அருகிலுள்ள சுகாதார நிலையங்களுக்கு நியமிக்கப்படவுள்ளனா்.

இவ்வாரானவர்களுக்கான பிரதான பணிகள்
““““““““““““““““““““““““““““““““

* கொரோனா தடுப்பு திட்டத்திணை முன்னெடுக்கவென சுகாதார திணைக்களங்களுக்கு உதவுதல்.

* பிரதேச செயலகத்தில் உள்ள சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலக சேவைகளிற்கு உதவி புரிதல்.

* குறித்த சுகாதார உத்தியோகத்தர்களின் வெளிக்கள செயற்பாட்டிற்கு உதவி செய்தல்.

* கொரோனா தடுப்புக்காவல்களில் உள்ளவர்களுக்கு உலர் உணவு, உடை, அத்தியாவசிய தேவைகளை முன்னெடுக்க ஒத்தாசை புரிதல்.

* கிராமம் தோறும் கொரோனா பற்றிய விழிப்புணர்வு திட்டங்களை மேற்கொள்ளல்,

* விசேடமாக சேவை ஏற்படுமிடங்களுக்கு களப்பணிகளில் ஈடுபடல்.

* சமுா்த்தி பெறுபவா்களுக்கு உதவி செய்தல்.

* Hospital, Medical தேவைகளை கேட்பவர்களுக்கு உரிய நடைமுறையினை அதிகாரிகளுடன் மேற்கொள்ளல்.

* சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலக செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் (எழுத்துவேலைகள், கணினி செயற்பாடுகள், இதர முக்கிய செயற்பாடுகள்).

* விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கு சேவை வழங்க பூரண உதவி புரிதல்.

போன்ற பல்வேறு வகையில் பிரதேச அல்லது மாவட்ட அல்லது கிராம சுகாதார பிரிவுகளிற்கு தமது பணிகளை சுய விருப்பத்துடன் மேற்கொள்ளவென இப் பயிற்சி பட்டதாரிகள் சேர்க்கப்படுவர் மற்றும் ஏற்கனவே கூறப்பட்ட இரண்டு மாத கால தலைமைத்துவ பயிற்ச்சியும் இதன்போது வழங்கப்படும்.

நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்ட வேலையற்ற பயிற்சி பட்டதாரிகளுக்கு சுகாதார அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது, எனவே கொரோனா வைரஸை ஒழிக்க உதவுவதற்காக ஏற்கனவே பணிபுரிந்ததாக அறிவிக்கப்பட்ட பயிற்சி பட்டதாரிகள் தங்களது பிரதேச செயலகத்தில் உள்ள அலுவலகத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். மாநில சுற்றறிக்கை தேவை கவுன்சில் மற்றும் உள்துறை அமைச்சகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அரசு அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலாளர்,
ஹெட்டியாராச்சி.


Post a Comment

Previous Post Next Post

Contact Form