சீனாவில் Hanta எனப்படும் வைரஸினால் ஒருவர் உயிரிழப்பு

சீனாவின் யுன்னா மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் Hantavirus எனப்படும் வைரஸ் தாக்கத்துக்கு உட்பட்டு மரணித்துள்ளார்.

இவர் வேலைக்காகச் சென்று தனது வீட்டுக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்த போதே திடீரென மரணித்துள்ளார். அவரை வைத்தியர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது அவர் ஹன்டா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தமை தெரிய வந்துள்ளது. இதனால் அவர் பிரயாணித்த பஸ்ஸில் பயணித்த ஏனைய 32 பேரும் பரி சோதிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை பிரான்சும் தமது நாட்டிலும் குறித்த வைரஸ் தாக்கம் ஏட்பட்டுள்ளாதாக அறிவித்துள்ளது.

ஹன்டா வைரஸ் என்பது எலி போன்ற கொறித்து தின்னும், வலுவான பற்களை கொண்ட பிராணிகளின் சிறுநீர், எச்சில், மலம் ஆகியவற்றின் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடியதாகும். எனினும் அவற்றிடமிருந்து  ஏனைய விலங்குகளுக்கு பரவாது.

ஹன்டா வைரஸ் தாக்குதலின் அறிகுறிகளாக காய்ச்சல், குளிர், தலைவலி, தசை வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு, அடிவயிறு வலி  போன்றவை காணப்படும்.

இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால் ஆரம்பித்தில் கண்டுபிடிப்பது கடினமாகும். சுமார் 10 நாட்களுக்குப் பின்னரே அதுபற்றி தெரிய வரும்.

இந்த வைரஸானது முதலில் நுரையீரலைத் தாக்குவதுடன், பின்னர் ரத்த நாளங்களுக்குள் செல்லக்கூடியதாகும். 

எனினும், இது கொரேனா வைரஸைப் போல் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவக்கூடியது அல்ல.

இணைப்பு

Post a Comment

Previous Post Next Post

Contact Form