ஆமடில்லோ (Armadillo) என்று
ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த உயிரினத்தில் பல விசேட பண்புகளை அல்லாஹ்
வைத்திருக்கின்றான். பொதுவாக இது எமக்கு மிக அன்னியமான ஒரு உயிரினம். இதுவரை 20 வகையான
அழுங்கினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது தமிழில் அழுங்கு என்று அழைக்கப்படுகின்றது.
Armadillo என்பது ஸ்பானிய மொழிச் சொல்லாகும். இதன் விளக்கம் “little armored one” அதாவது சிறிய கவசத்தைக்கொண்ட ஒன்று என்பதாகும். அழுங்கின்
மேற்புதறத்தில் ஆமையினதுபோன்ற ஓடு காணப்படுவதாலும் முதுகு முயலுடையது போன்று
வளைந்து காணப்படுவதாலும் “turtle-rabbit” (ஆமை முயல்) என ஆங்கிலத்தில் செல்லமாக அழைக்கப்படுவதுண்டு.
Tags
ஏனையவை