(Makeen Khan)
மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.(அல்குர்ஆன் 17:01)
ஹிர்க்கல் சாலமோனாக மாற்றப்படவுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா
மஸ்ஜிதுல் அக்ஸாவின் உண்மைத் தோற்றத்தின் ஒரு பகுதி
பாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவரின் அற்புத விளக்கம்
மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.(அல்குர்ஆன் 17:01)
அதிக நன்மைகளை நாடி
பிரயாணம் மேற்கொள்வதற்கு இஸ்லாம் அனுமதி வழங்கிய உலகின் சிறப்பு மிக்க மூன்று
புனிதத் தளங்களில் ஒன்றாக பாலஸ்தீனத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அக்ஸா
காணப்படுகின்றது.
(அதிக நன்மையை நாடி) மூன்று
பள்ளிவாசல்கள் தவிர வேறு பள்ளிகளுக்குப் பிரயாணம் மேற்கொள்ளக் கூடாது. அவைகளாவன:
மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளி (மஸ்ஜிதுன்னபவீ),
மஸ்ஜிதுல் அக்ஸா என நபிகள்
நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஸயீத்
(ரலி), நூல்: புகாரி 1189,
1197, 1864, 1996
பாலஸ்தீனத்திற்கு எதிரான
இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரமடைந்துள்ள இந்நிலையில் மஸ்ஜிதுல் அக்ஸா தொடர்பான ஒரு
முக்கிய விஷயத்தினை நாம் அத்தனை பேரும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
மறக்கடிக்கப்பட்ட மஸ்ஜிதுல்
அக்ஸா
இஸ்லாமியர்களை
வீழ்த்துவதற்காக எதிரிகள் மேற்கொண்ட திட்டங்களில் மிக முக்கியமானதும், முதன்மையானதும்
இஸ்லாத்தை விட்டும் முஸ்லிம்களை தூரப்படுத்துவதாகும். இதில் பெரு வெற்றியை
எதிரிகள் கண்டுள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.பழைய கட்டடம் போல்
காட்டப்படுவதே உண்மையான அக்ஸாவாகும்
குர்ஆனை வேதமாக ஏற்றுள்ள
முஸ்லிம்களை குர்ஆனிய கருத்துக்களை விடுத்து,
தரீக்காக்கள், மத்ஹபுகள், இமாம்கள், அவ்லியாக்கள்
என்று பலவிதமான நம்பிக்கையின் பக்கமும் தள்ளிவிடுவதின் மூலம் இஸ்லாத்தை விட்டும்
முஸ்லிம்களை அன்னியப்படுத்தினார்கள்.
இதன் விளைவாக முஸ்லிம்கள்
மார்க்க விஷயத்தில் எப்படி வழி தவறிப் போனார்களோ,
அதே அளவு தமது புனிதத்
தளங்களின் புனிதத்தை காப்பதிலும் தோழ்வி கண்டார்கள். இதற்கு மஸ்ஜிதுல்
அக்ஸாவுக்கு ஏற்பட்ட கதி நிதர்சன ஆதாரமாகும்.
அக்ஸாவாக காட்டப்படும் குப்பதுஸ்
ஸக்ரா
இஸ்லாத்தின் மூன்று
புனிதத் தளங்களின் ஒன்றான பாலஸ்தீனத்தில் அமைந்திருக்கும் மஸ்ஜிதுல் அக்ஸா இன்று
இஸ்லாத்தின் மிகப் பெரும் எதிரிகளான யூதர்களின் கட்டுப்பாட்டின் கீழ்
இருக்கின்றது. மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு செல்ல விரும்பும் முஸ்லிம்கள் இஸ்ரேல் ஊடாக
அனுமதி (வீஸா) பெற்றுத் தான் அக்ஸாவுக்குள் நுழைய முடியும். அக்ஸாவின் முழுமையான
கட்டுப்பாடு யூதர்கள் வசமே உள்ளது.
தங்க நிறத்தில்
காட்டப்படுவது குப்பதுஸ் ஸக்ராவாகும் –
அக்ஸா இஸ்ரேலின்
கட்டுப்பாட்டில் இருக்கின்றது
முஸ்லிம் சமுதாயத்தை
சேர்ந்தவர்கள் எதனை அக்ஸா என்று இன்று நம்பிக் கொண்டிருக்கின்றார்களோ, அது “குப்பதுஸ்
ஸக்ரா” என்ற பள்ளிவாயலாகும். இன்று தங்க நிறத்தில் முஸ்லிம்கள்
வீடுகளில் அழகுக்காக மாட்டி வைத்துக் கொண்டு அக்ஸா பள்ளிவாயல் என்று நம்பிக்
கொண்டிருக்கும் குறித்த கட்டடம் கலீபா அப்துல் மலிக் பின் மர்வான் காலத்தில்
கட்டப்பட்ட “குப்பதுஸ் ஸக்ரா”
என்ற பள்ளியாகும்.
குப்பதுஸ் ஸக்ரா
என்றழைக்கப்படும் கட்டடம் தான் இன்று பெரும்பாலான முஸ்லிம்களினால் அக்ஸா என்று
நம்பப்படுகின்றது.
அப்துல் மலிக் பின்
மர்வான் அவர்கள் செய்த அதே வரலாற்றுத் தவறு இன்றும் அரபி ஆட்சியாளர் மத்தியில்
பிரதிபளிப்பதை நாம் காண முடியும். உதாரணமாக மக்காவில் அமைந்துள்ள புனித கஃபாவுக்கு
முன்னால் ஸவூதி அரேபிய ஆட்சியாளரினால் மிகப் பெரியதொரு இரட்டைக் கோபுரம்
அமைக்கப்பட்டு அதில் ஆட்சியாளரின் பெயரும் பெரிதாக பொறிக்கப்பட்டிருப்பதை காண
முடியும். இது யார் செய்தாலும் புனித கஃபாவின் கண்ணியத்திற்கு எதிரான செயலாகவே
நோக்கப்பட வேண்டும்.
மர்வான் அன்று செய்த தவறு
குப்பதுல் ஸக்ரா இன்றைய முஸ்லிம்களினால் அக்ஸாவாக பார்ப்பதற்கும், அக்ஸா
பற்றிய கவலை இல்லாமலாவதற்கும் காரணமாக மாறியது.
ஹிர்க்கல் சாலமோனாக மாற்றப்படவுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா
பாலஸ்தீனத்திலுள்ள
மஸ்ஜிதுல் அக்ஸாவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள இஸ்ரேல் அதனை இல்லாமலாக்கி
அந்த இடத்தில் “ஹிர்க்கல் சாலமோன்”
என்ற பெயரில் சாலமோன்
(சுலைமான் நபி) உடைய உருவம் என்று யூதர்கள் நம்பிக்கை கொண்டுள்ள ஒரு உருவத்தை
சிலையாக வடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மஸ்ஜிதுல் அக்ஸாவின் உண்மைத் தோற்றத்தின் ஒரு பகுதி
இன்று முஸ்லிம்களுக்கு
மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையின் படி மஸ்ஜிதுல் அக்ஸா உடைக்கப்பட்டு சுலைமான்
நபியின் உருவச் சிலையை யூதர்கள் அந்த இடத்தில் உருவாக்கினால், “குப்பதுல்
ஸக்ரா” என்ற கட்டடம் உடைக்கப்பட்டு சிலை நிறுவப்பட்டதாக
முஸ்லிம்கள் நம்பிக் கொண்டிருப்பார்கள்.
வரலாற்றில் நிகழ்ந்த ஒரு
மிகப் பெரிய தவறு இன்று பெரும்பாலான முஸ்லிம்களின் நம்பிக்கையான மாறிவிட்டது
கவலைக்குறிய விஷயமாகும்.
பாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவரின் அற்புத விளக்கம்
இலங்கையில் அமையப்
பெற்றுள்ள பாலஸ்தீன தூதுவராலயத்தின் உயர் ஸ்தானிகராலயத்தில் கூட குப்பதுஸ்
ஸஹ்ராவைத் தான் படமாக மாட்டி வைத்துள்ளார்கள். இதற்குறிய விளக்கம் கோரப்பட்ட
நேரத்தில் அது அழகாக இருக்கின்றது அதனால் மாட்டியுள்ளோம் என்று விளக்கம் அளிக்கின்றார்கள்.
உண்மை வரலாற்றை மறைப்பதில் இஸ்ரேல் எவ்வளவு தூரம் வெற்றி கண்டுள்ளது என்பதற்கு
இதுவொரு சான்றாகும்.
Tags
இஸ்லாம்