பிலிப்பைன்ஸில் முஸ்லிம் சுயாட்சி பகுதியை நிறுவ சட்டம்


பிலிப்பைன்ஸின் தென் பிராந்தியத்தில் முஸ்லிம் சுயாட்சி பகுதி ஒன்றை நிறு வுவதற்கு விரைவில் சட்டம் இயற்றும் படி அந்நாட்டு ஜனாதிபதி பெனிங்கொ அக்கியுனோ கொங்கிரஸ் அவையை கோரியுள்ளார்.

பிலிப்பைன்ஸில் ஐந்து தசாப்தங்கள் நீடித்த உள்நாட்டு யுத்தத்தை முடி வுக்கு கொண்டுவரும் உடன்படிக்கை கடந்த மார்ச் மாதம் கைச்சாத்தான நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் உள் நாட்டு யுத்தத்தில் 120,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதோடு இர ண்டு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர்.

இதில் பிரதான கிளர்ச்சிக் குழுவான மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் சமூக, பொருளாதார அதிகாரங்களுக்கு பதில் ஆயுதத்தை களைய இணங்கினர். இந்நிலையில் ஜனாதிபதி அக்கியுனோ தனது பதவிக்காலம் முடிவடையும் 2016 _ன் மாத த்திற்கு முன்னர் இந்த உடன்படிக்கையை அமுலுக்கு கொண்டுவர எதிர்பார்த்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form