மூன்றே மாதங்களில் 3 மடங்கு அதிகரித்த ISIS போராளிகளின் எண்ணிக்கை


ISIS போராளிகளின் எண்ணிக்கை மூன்றே மாதங்களில் 3 மடங்கு அதிகரித்து விட்டதாக அமெரிக்க உளவுத்துறையான CIA அறிவித்துள்ளது.

இந்தப் படையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்களும் சேர்ந்து சிரியா மற்றும் ஈராக் இராணுவத்தினருடன் போரிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்தியாவை சேர்ந்த சுமார் 100 இஸ்லாமிய இளைஞர்களும் இந்தப் படையில் சமீபத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்டனை சேர்ந்த சுமார் 600 இஸ்லாமிய இளைஞர்கள் ISIS படையில் இணைந்து சிரியா மற்றும் ஈராக்கில் போராடி வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ISIS படையில் சுமார் 10 ஆயிரம் போராளிகள் இருக்கக்கூடும் என்று உலக நாடுகள் கூறி வந்தன. அமெரிக்காவின் மதிப்பீடும் இதுவாகதான் இருந்தது. கடந்த மே மாதம் சுமார் 10 ஆயிரம் பேர் இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்ட ISIS படையில் தற்போது சுமார் 31,500 உள்ளனர் என்று அமெரிக்க உளவுப்படையான CIA தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த CIA வின் செய்தித் தொடர்பாளர், ’கடந்த மே மாதத்துக்கு முன்னர் வரை எங்களுக்கு கிடைத்த உளவுத் தகவல்களின்படி, ISIS படையில் சுமார் 10 ஆயிரம் போராளிகள் வரை இருக்கக்கூடும் என்று கருதப்பட்டு வந்தது.

ஆனால், கடந்த மே முதல் ஆகஸ்ட் வரையிலான 4 மாத காலத்தில் இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்து விட்டது. அந்தப் படையில் தற்போது 20 ஆயிரம் முதல் 31 ஆயிரத்து 500 போராளிகள் வரை உள்ளதாக தெரியவந்துள்ளதுஎன்று கூறியுள்ளார்.

Source- Engal Thesam 


Post a Comment

Previous Post Next Post

Contact Form