இந்தியாவின் கடும்
எதிர்ப்பையும் மீறி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் குறித்த விவாதம்
நடைபெற்றது. இதற்கு இந்தியாவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
காஷ்மீரில் நிலவும்
அரசியல் மற்றும் மனித உரிமைகள் நிலை என்ற தலைப்பில் நாடாளுமன்ற குழு அறையில் இந்த
விவாதம் நடை பெற்றது. விவாதத்தை முன்மொழிந்து பேசிய மக்கள் சபை எம்.பி டேவிட் வோட், உலக
அமைதிக்கு காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியம் என்றார். தீர்வு காணப்படாதவரை இந்தியா,
பாகிஸ்தான் இடையே எப்போது
வேண்டு மானாலும் போர் மூளும் என்று அவர் கூறினார். இதனை
வெளிநாட்டு விவகாரம் என்று கூறிவிடமுடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
ஆனால் காஷ்மீர்
பிரச்சினையில் பிரிட்டன் தலையிடுவது எந்த வகையிலும் பயனளிக்காது என்று முன்னாள்
அமைச்சர் பார்கர் கூறினார். இந்திய வம்சா வளியைச் சேர்ந்த எம்.பி. விரேந்திர‘ர்ம
உள்ளிட்ட 13 எம்.பி.க்கள் விவா தத்தில் பங்கேற்றனர்.
காஷ்மீர் பிரச்சினை
பிராந்திய மற்றும் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத் தலாக இருப்பதாக கூறிய
உறுப்பினர்கள், காஷ்மீர் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை அளிக்கவேண்டும் என்று
வலியுறுத்தினர்.
Tags
உலகம்