"இஸ்ரேலுக்கு நிதியுதவி செய்து துரோகமிழைத்த அரபு நாடுகள் : ரஷீத் கன்னூஷி காட்டம்


காஸாவின் மீதான இஸ்ரேலின் வெறியாட்டத்துக்கு அரபு நாடுகள் நிதியுதவி அளித்தன என துனிஷியாவை ஆளும் கட்சியின் தலைவர் ரஷீத் கன்னூஷி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

அரபு வசந்ததுக்கு வித்திட்ட துனிஷியாவில் ஆட்சியை பிடித்த என் நஹ்தா அமைப்பின் தலைவரான ரஷீத் கன்னூஷி உலகளாவிய அளவில் மதிக்கப்படும் இஸ்லாமிய சிந்தனைவாதிகளில் ஒருவராவர். 2012ல் டைம் பத்திரிகையால் செல்வாக்கான 100 நபர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரஷீத் கன்னூஷி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளியன்று ஜும்மா உரையாற்றிய ரஷீத் கன்னூசி காஸாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் பல நாடுகளின் உண்மை முகத்தை வெளிக்கொணர்ந்ததாக குற்றம் சாட்டினார். இஸ்ரேலுக்கு நிதியுதவி அளித்த பல்வேறு அரபு நாடுகள் காஸா இனச்சுத்திகரிப்பின் போது மெளனம் காத்ததாக குற்றம் சாட்டினார்.

மேலும், காஸா மீதான தாக்குதலின் போது ஐ.நா மனித உரிமைகள் மீறல் குறித்து கவலைப்படவில்லை என்று கூறிய ரஷீத் கன்னூசி இப்போரில் நடுநிலை நிலைப்பாடு என்பது ஏமாற்று வேலை என்று குறிப்பிட்டார். ஒன்று ஆக்கிரமிப்பின் பக்கம் இருக்க வேண்டும் அல்லது நீதியின் பக்கம் இருக்க வேண்டும் என்றும் ரஷீத் கன்னூசி குறிப்பிட்டார்.

உலகெங்கும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்களை மேற்கோள் காட்டிய கன்னூஷி யூத ஊடகத்தால் உலகின் பார்வையை மாற்ற முடியவில்லை என்றும் கூறினார். மேலும், அரபு வசந்ததுக்கு எதிரான சதியே எகிப்தில் நடந்த ஆட்சி மாற்றமும் அதை தொடர்ந்து நடக்கும் சதிகளும் என்றும் ரஷீத் கன்னூசி குறிப்பிட்டார்.

ஆனால், அச்சதிகளுக்கு எதிராக துனிஷியாவில் இஸ்லாமிஸ்டுகள் பெற்ற வெற்றியும், துருக்கியில் எர்துகான் பெற்ற வெற்றியும் தற்போது ஹமாஸ் பெற்ற வெற்றியும் திகழ்வதாகவும் ரஷீத் கன்னூஷி குறிப்பிட்டார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form