கடந்த 26 நாட்களாக இடம்பெற்று வந்த இஸ்ரேலின் சட்டவிரோத
காசா ஆக்கிரமிப்பின் தோல்வியின் அறிகுறியாக இஸ்ரேல் ஒருதலை பட்சமாக தமது
ஆக்கிரமிப்பு படையினரின் ஒரு பகுதியினரை காசாவின் சில பகுதிகளில் இருந்து வாபஸ்
பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
கடந்த வெள்ளிகிழமை (2014.08.01) இஸ்ரேலிய பாதுகாப்பு உயர்மட்டக் குழுவின் ஐந்து
மணிநேர மந்திர ஆலோசனைகளின் பின்னர் இம்முடிவு கடந்த சனிக்கிழமை
அறிவிக்கப்பட்டிருந்தது. வழிந்த இனவழிப்பு, ஆக்கிரமிப்பு போரில் களமிறங்கிய இஸ்ரேலைப்
பொருத்தவரை எதிர்பாராத இழப்புக்களும்,
சர்வதேச எதிர்ப்பலைகளும், உள்நாட்டில் எழுந்துள்ள மக்கள்
எதிர்ப்புணர்வுகளும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலிய அரசை
நிர்ப்பந்தித்துள்ளது. இந்நிலையில் யுத்த முடிவுகள் 2000 மே 22ம் திகதி லெபனானை விட்டு இஸ்ரேல் கண்ணீருடன்
வெளியேறியதை ஞாபகப்படுத்துகின்றது.
இதுவரை 1766 பேர் ஷஹீதக்கப்பட்டு 9000 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 40000 வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதுடன் 10000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்து
அகதிகளாகி உள்ளனர். பல பாடசாலைகள்,
வைத்திய சாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழிற்சாலைகள், மஸ்ஜித்கள் உள்ளிட்ட அனைத்தும் தரை
மட்டமாக்கப்பட்டுள்ளன. சுமார் 4000000000
அமெரிக்க டொலர் பெறுமதியான
இழப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags
உலகம்