இஸ்ரேலுக்கு எதிராக காட்டமான அறிக்கையை விடுத்துள்ள காம்பியா அதிபர்


காம்பியா அதிபர் யஹ்யா ஜமீஹ் இஸ்ரேலுக்கு எதிராக காட்டமான அறிக்கையை விடுத்துள்ளார். இஸ்ரேலின் பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரங்கள் ஹிட்லர் யூதர்களுக்கு எதிராக அரங்கேற்றிய கொடுமைகளை விட மோசமானது என்றும் மேற்குலகம் கண்ணை மூடிக்கொண்டு இஸ்ரேலை ஆதரிப்பதை விடுத்து இஸ்ரேலின் கொடூரங்களை கண்டிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும் போது மேற்குலக ஊடகங்கள் மற்றும் தலைவர்கள் இஸ்ரேலின் இனபடுகொளைகளை பொய்களின் மூலம் மறைப்பது மோசமான செயல் என்றும் முன்னர் தென் ஆப்ரிக்காவில் எந்த இனவெறி அரங்கேற்றப்பட்டதோ அது தற்பொழுது பாலஸ்தீனில் அரங்கேற்றபட்டுவருவதாகவும் கூறியுள்ளார். 
மேலும் அவர் கூறும் போது நான் யூதர்களை வெறுக்கவில்லை காரணம் நான் ஒரு முஸ்லிம்.. ஆனால் பாலஸ்தீனர்களுக்கு எதிரான யூதர்களின் காட்டும்கிராண்டிதனத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form