(Mohideen Ahamed Lebbe)
1.இன்றைய முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தபோதிலும்
கலப்படமான சிந்தனைகளாலும் உணர்வுகளாலும் செயலாக்க அமைப்புகளாலும் ஆதிக்கம்
செலுத்தப்பட்டவர்களாக இருந்துவருகிறார்கள்.
2.இவர்கள் இஸ்லாத்தை அவர்களது தீனாக கருதும் அதேவேளை குப்ர் ஆட்சியார்களால்
தாங்கள் ஆட்சிசெய்யப்படுவதற்கு உடன்பட்டவர்களாகவும் குப்ர் சட்டங்களும், செயலாக்க அமைப்புக்களும் தங்கள் மீது
நடைமுறைப்படுத்தும் விடயத்தில் மௌனித்துவருகிறார்கள்.
3.இஸ்லாம் மேலோங்கவேண்டும் எனும் சிந்தனை ஒருபுறமிருக்க தேசியவாதத்திலும்
பிரிவினைவாதத்திலும் பிராந்திய உணர்வுகளிலும் உழன்று வருபவர்களாக
இருந்துவருகிறார்கள்.
4.அமெரிக்காவையும்,
பிரிட்டணையும், ரஷ்யாவையம் எதிரிகளாக கருதும் அதேவேளை இந்த
நாடுகளது உதவியை நாடுபவர்களாகவும் நேசக்கரம் நீட்டுபவர்களாகவும் தங்கள்
பிரச்சினைகளுக்கு குப்பார்களான அவர்களிடம் தஞ்சம் அடையக்கூடியவர்களாக
இருந்துவருகிறார்கள்.
5.மூமின்கள் அனைவரும் சகோதரர்கள் என்று ஏற்றுக் கொள்ளும் அதேவேளை தங்கள்
இனத்தின் மீதும் நாட்டின்மீதும் வெறித்தனமான பற்றுதல் கொண்டவர்களாக
இருந்துவருகிறார்கள்.
6. அரபுமக்கள் அரபுவாதத்திலும்,
துருக்கியர்கள் துருக்கிய
தேசியவாதத்திலும்,
பாரசீகர்களும்
ஈராக்கியர்களும் சிரியர்களும் எகிப்தியர்களும் அவரவர் நாட்டு இனவாதத்திலும்
கண்மூடித்தனமாக மூழ்கியிருக்கிறார்கள்.
7.இஸ்லாத்தின் சட்டங்களில் நம்பிக்கை வைத்திருப்பதாக கூறும் அதேவேளை இஸ்லாத்தின்
சட்டங்களோடு அடிப்படையில் முறண்படும் ஜனனாயகத்திற்காகவும் சுதந்திரந்திர
உரிமைகளுக்காகவும் இறையான்மை மக்களுடையது என்று கூறும் மக்களாட்சி மற்றும்
பொதுவுடைமைக் கொள்கைகளுக்காகவும் அழைப்பு விடுக்கக்கூடியவர்களாக இருந்துவருகிறார்கள்.
8.இதற்கு மேலாக முஸ்லிம் பிரதேசங்களிலும் அரசமைப்பு, பொருளாதாரம், கல்வி,
வெளிவிவகாரக்கொள்கை
மற்றும் உரிமையியல் விவகாரம் ஆகியவற்றில் முஸ்லிம்கள் மீது குப்ர் சட்டங்களும்
அதன் செயலாக்க அமைப்புகளும் நடைமுறைப்படுத்தப்படுவதை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்கிறார்கள்!
Tags
இஸ்லாம்
இசுலாத்தின சட்டங்களோடு முரண்படும் ஜனநாயகத்திற்காகவும் ...... என்ற வரிகள் தாங்கள் ஒரு முட்டாள் அரேபிய அடிமை கிணற்றுத்தவளை எனக் காட்டுகிறது. ஆட்சிமுறை பற்றி இசுலாம் கூறுவது போதாது. ஜனநாயக முறை இசுலாத்திற்கு எதிரானது என்றுஎந்த கழுதையம் சொல்லவில்லை. வோட்டுபோட்டு அரசை தோ்வு செய்யும் முறைக்கு இசுலாமிய சமூகம் மாறவில்லையெனில் காடையர்களின் ஆட்சிதான் ஏற்படும். இதுதான் இன்றைய உண்மை நிலை. அரேபிய மதத்தை பின்பற்றுவதாகச் சொல்லும் நாடுகளை காடையர்கள்தாம் ஆட்சி செய்கின்றாா்கள்.
ReplyDelete