தென் துருவக் கண்டத்தில்
பனி உருகி ஆறுகள் பெருக்கெடுக்கெடுப்பதென்பது அதிகரித்துவருகிறது.
அதனால் கடல் மட்டம்
உயருவதற்கும் கரையோர சமூகங்கள் பாதிக்கப்படுவதற்குமான ஆபத்து அதிகரித்துவருவதாக
ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.
நான்கு ஆண்டுகளுக்கு
முன்னர் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்ததை விட தற்போது இரண்டு மடங்கு அதிகமான
வேகத்தில் பனி உருகுவதாக தெரியவந்துள்ளது.
பனிப் படலத்தின் மாறும்
வடிவத்தை கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ராடார் கருவியின் உதவியுடன்
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் கிரியோசாட் செயற்கைக்கோள் இந்த ஆய்வை
மேற்கொண்டது.
அண்டார்டிகாவில்
இருக்கின்ற மொத்த பனியும் உருகினால் உலகத்தில் கடல் மட்டம் ஒரு மீட்டருக்கும்
அதிகமாக உயர்ந்துவிடும் என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா அண்மையில்
தெரிவித்திருந்தது.
மிக அதிகமாக பனி உருகி
வரும் அண்டார்டிகாவின் மேற்குப் பகுதி குறித்தே விஞ்ஞானிகள் அதிக கவலை
கொண்டுள்ளனர்.
ஒரு சில நூற்றாண்டுகளில்
அங்குள்ள பனி மொத்தமும் உருகலாம் என அஞ்சப்படுகிறது.
நன்றி-பொது
அறிவு
Tags
ஏனையவை