'நேற்று ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்ற இஸ்ரேல் மற்றும் பிரெஞ்சு அணிகளுக்கு
இடையிலான "Maccabi
Haifa" என்ற சீசன் கால்பந்து போட்டியில்,
இரு அணிகளும் விறுவிறுப்புடன் விளையாடிக்கொண்டிருந்த
நிலையில் திடிரென்று மைதானத்துக்குள் புகுந்த ஆஸ்திரிய நாட்டில் வாழும் துருக்கி
நாட்டு வம்சாவளி ரசிகர்கள் திடிரென்று இஸ்ரேலிய நாட்டு வீரர்களை கடுமையாக
தாக்கியுள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பாராத
இஸ்ரேலிய வீரர்களை எதிர் அணியை சேர்ந்த வீரர்கள் ஒன்று சேர்ந்து தாக்கிய
ரசிகர்களிடம் இருந்து விலக்கி காப்பாற்றியுள்ளனர்.
தாக்குதலை தொடர்ந்து
ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது