அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கி விமானி உட்பட 116 பேர் உயிரிழந்துள்ளனர்.



பர்கினா ஃபாசோவில் இருந்து புறப்பட்ட விமானம் நைகரில் விழுந்து நொறுங்கியது. விமானம் நொறுங்கியதில் விமானிகள் 2 பேர், ஊழியர் 4 பேர், பயணிகள் 110 பேர் என மொத்தம் 116 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பர்கினா ஃபாசோவில் அவ்கடூகு நகரில் இருந்து புறப்பட்ட 30 நிமிடங்களில் விமான தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. 
இது இந்த மாதத்தில் நடக்கும் 2வது பெரிய உயிரிழப்பு சம்பவம் ஆகும். நெதர்லாந்து தலைநகரில் இருந்து சென்ற மலேசிய விமானம் உக்ரைன் எல்லையில் கடந்த 17-ம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்டதில் 298 பேர் உயிரிழந்தனர். 

மலேசியாவுக்கு சொந்தமான மற்றொரு விமானம் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பீய்ஜிங் சென்ற போது மார்ச் 8ம் தேதி மாயமானதும் குறிப்பிடத்தக்கது. 

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதன் பரபரப்பு அடங்குவதற்குள் அல்ஜீரியாவை சேர்ந்த மற்றொரு விமானம் திடீரென விபத்துக்குள்ளானது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.????

Post a Comment

Previous Post Next Post

Contact Form