காஸாவில் புற்றுநோயை உருவாக்கும் கொடூர வெண்பாஸ்பரஸ் ரசாயனங்களை வீசும் இஸ்ரேல் ராணுவம்


பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவமானது புற்றுநோயை உருவாக்கும் கொடூர வெண்பாஸ்பரஸ் ரசாயன ஆயுதங்களை வீசி வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் கடந்த 2 வாரங்களாக இஸ்ரேல் கண்மூடித்தனமாக வீசி வரும் தாக்குதல்களில் 600க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். சுமார் 4 ஆயிரம் படுகாயமடைந்துள்ளனர்.

உயிரிழப்புகள் மற்றும் படுகாயமடைந்தோரின் உடல்களை பரிசோதித்த மருத்துவர்கள், இதுவரையில் இப்படியான யுத்த காயங்களை தாங்கள் பார்த்தது இல்லை என்றும் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால்தான் இத்தகைய காயங்கள் ஏற்படும் என்றும் கூறியுள்ளனர்.
அத்துடன் இஸ்ரேல் வீசும் வெண்பாஸ்பரஸ் குண்டுகளில் புற்றுநோயை உருவாக்கும் கிருமிகளும் இணைக்கப்பட்டிருப்பதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.
கடந்த ஒரு வார காலமாக தடை செய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேல் வீசி வருகிறது என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஆனால் சர்வதேச சமூகம் இது குறித்து மவுனம் சாதித்து வருவதால் படுகொலையாகும் பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form