வீரர்களுடன் மோத தைரிமில்லாத பொட்டை யூத இராணுவம் அப்பாவி பொதுமக்களை
கொன்று குவித்து வருகின்றனர். காஸாவில் அமைந்துள்ள அல் அக்ஷா மருத்துவமனை மீது இன்று நடந்த இன்னுமொரு ஷெல் தாக்குதலில் அப்பாவிகள் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் சுமார் அறுபதுக்கும் அதிகமானோர் படுகாயமைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார
அமைச்சகம் அறிவித்துள்ளது . குறித்த அரச மருத்துவமனை வளாகத்தில் யூத இராணுவம் கடுமையான ஷெல் தக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காசாவில் உடனடி
போர்நிறுத்தத்துக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலும், அங்கு இஸ்ரேலின் விமான தாக்குதல்களும் தாங்கிப்படை ( tank) தாக்குதல்களும் தொடர்கின்றன.
ஆயிரக்கணக்கான
மக்களை வெளியேறும்படி அறிவிக்கப்பட்டுள்ள ஷஜாய்யா மற்றும் மகாஸி பிரதேசங்களில்
இஸ்ரேலிய விமானங்கள் வட்டமிட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளன.
அங்கு
பீரங்கித் தாக்குதல்களும் தொடங்கப்பட்டுள்ளதாகசர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காஸா மீது கடந்த இருவார காலமாக இஸ்ரேல்
கட்டவிழ்த்துவிட்டிருக்கும் பெரும் போரினால் 500க்கும்
மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுமார் 3 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று
ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதல்களில் தமது படைவீரர்கள் 13 பேரை இழந்துள்ளதாக இஸ்ரேல் கூறுகின்றது. பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின்
கொடூர தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்கா வெளியுறவுத் துறை
அமைச்சர் ஜான் கெர்ரி எகிப்து விரைந்துள்ளார்.
முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அவர், “காஸாவில் ராணுவ நடவடிக்கை விரிவுபடுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும். 2012 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும்
இருதரப்பினரும் விரைவில் மேற்கொள்ள வேண்டும்.இதற்கு ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள்
ஒப்புக்கொள்ளும் வகையில் எகிப்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு அமெரிக்கா
தொடர்ந்து துணை நிற்கும்” என்று அவர் கூறியதாக அமெரிக்க வெளியுறவுத்
துறை தெரிவித்துள்ளது
Tags
உலகம்