பெருநாள் நெருங்கி வரும்
நிலையில் பிறை சர்ச்சையும் வந்து விடுமோ எனும் அச்சம் சாதாரண
பொது மக்கள் முதல் ஜம்மியா
உட்பட மார்க்க அறிஞர்களிடமும் நிலவி வரும்
நிலையில் என்னதான்
சமாளிக்க முனைந்தாலும் தொடர்ச்சியாக
இது தொடர்பான ஆக்கங்களும், விளக்கங்களும், ஆய்வுகளும் வந்த
வண்ணமிருக்கின்றன.
கடந்த கால அனுபவங்களைக்
கொண்டே அனைவரும்
முன்னேற்பாடாக தமது
கருத்துக்கள்,
அறிவுரைகள், ஆலோசனைகளைப்
பகிர்ந்து கொள்ள
முனைகிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். எனினும் கடந்த
வருடத்தில் நமது சமூகம்
பெற்றுக்கொண்ட அனுபவம்
பாரிய
மாற்றங்களை உள அளவில்
ஒவ்வொரு இலங்கை
முஸ்லிமிடமும்
தற்போது இது தொடர்பான
சர்ச்சைகளை முடுக்கிவிடும்
வகையில் சமூக
வலைத்தளங்களில் சில விடயங்கள்
நடந்தேறிக்கொண்டிருந்தாலும்
சமூகத்தின் இன்றைய
சூழ்நிலை கருதி ஒரு
குடையின் கீழ் இயங்க வேண்டிய காலத்தின் கட்டாயமும்
உணரப்பட்டிருக்கும்
நிலையில் சகல தரப்பும் அமைதி காப்பதுடன் பிறை அறிவிப்புக்கான
பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள
ஜம்மியாவின் முடிவுக்காக
காத்திருப்பதும் அது
தொடர்பில் அமைதி காப்பதும் சூழ்நிலைக்கு அவசியமான
விடயங்களாகவே நாம்
பார்க்கிறோம். வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற உணர்வுகளும் எண்ணங்களும்
அனுபவத்தில் கற்றுக்கொண்ட
பாடங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை என்பதிலும்
உடன்பாடு இருக்கின்ற
போதிலும் மாற்றங்களுக்கான வாய்ப்பையும் அவகாசத்தையும் வழங்கும் வகையில்
நம் சமூகம் பொறுமையுடனும்
ஒற்றுமையுடனும் செயற்பட
வேண்டும் எனும்
கோரிக்கையையும் முன் வைக்கிறோம்.
ஜஸாகல்லாஹ்-சோனகர் வலைத்தளம்