பாலஸ்தீன் விவகாரம் தீர்வு நோக்கிய சரியான பார்வை எது !?



1948 மே மாதம் 14 ம் திகதி உலக வரைபடத்தில் ஒரு திருட்டுத் தனம் செய்யப்படுகிறது . அந்தக் கரும்புள்ளி பல்லாயிரக் கணக்கானோர் படுகொலை செய்யப்படுவதற்கும் பல்லாயிரக் கணக்கானோர் அங்கவீனர் ஆவதற்கும் இலட்சக் கணக்கானோர் அகதிகள் ஆவதற்கும் கோடிக்கணக்கான அசையும் அசையா சொத்துக்களை இழப்பதற்கும் காரணமாகியது .அதுதான் இஸ்ரேல் எனும் முறையற்ற தேசத்தின் பிரகடனம் ஆகும்.


பாலஸ்தீனை பிரித்து யூதர்களுக்கு ஒரு தனிதேசம் உருவாக்கும் திட்டத்தை நவம்பர் 29 ,1947 ம் வருடம் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது ,அதற்கு சரியாக ஆறு மாதங்களின் பின்னர் நாசகரமான யூத தேசம் பிரகடனப்படுத்தப் படுகிறது. இதிலிருந்து இந்த விடயம் முஸ்லீம் உலகின் மீதான சர்வதேச சதியின் ஒரு வடிவமே என எம்மால் உணர முடியும்.


கி.பி.636 : கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில்  பாலஸ்தீனம் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது . அன்று தொடங்கி 1917 வரை பாலஸ்தீன் உதுமானிய கிலாபத்தின் இறுதிவரை இஸ்லாத்தின் அதிகார அரசின் பற்பல போராட்டங்களின் பின்னும் இழப்புகளின் பின்னும் இருந்து வந்துள்ளது .முதலாம் உலக மகா யுத்தத்தின் போது பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் போன்ற கிறிஸ்தவ தேசங்களின் கூட்டு சதிமூலம் பாலஸ்தீன் அவர்களின் வசமானது.
இஸ்லாத்தின் அதிகார அரசான கிலாபா ஆட்சியை உடைப்பதன் மூலமாக மட்டுமே பாலஸ்தீனில் தாம் விரும்பும் தனி தேசத்தை உருவாக்க முடியும் என்ற தெளிவான முடிவின் அடிப்படையில் யூதர்களும் கிறிஸ்தவ தேச இராணுவங்களோடு இணைந்து செயற்பட்டு உள்ளார்கள் என்பதை முதலாம் இரண்டாம் யுத்த வரலாறுகள் காட்டி நிற்கின்றன.


முஸ்லீம்களை போலவே யூதர்களும் கிறிஸ்தவர்களின் எதிரிகளாக வரலாற்றின் ஒரு நீண்ட பொழுதுகள் இருந்து வந்தாலும் இஸ்லாமிய எதிர்ப்பு ,மற்றும் முஸ்லீம் குரோதம் என்ற பொது அரசியலில் இவர்கள் ஒன்றாக இணைந்தது அதிசயமான விடயம் அல்ல. ஆனால் கிறிஸ்தவர்களால் யூதர்கள் துன்புறுத்த பட்ட நேரத்தில் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் அவர்கள் பாதுகாப்பாக தஞ்சம் அடைந்தார்கள் என்பது மறுக்க முடியாத வரலாறு.


கி.பி.636 : கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் பாலஸ்தீனம் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. 11ஆம் நூற்றாண்டு கி.பி 1095இல் முதல் சிலுவை யுத்த கொலைகாரர்களால் முஸ்லிம்கள் வசமிருந்த பாலஸ்தீனம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இப்போது காசா வில் நடத்துவதை விட கோரமான படுகொலைகளை திருச்சபைகள் நடத்தின.90 ஆண்டுகள் ஆக்கிரமிப்பு தொடர்ந்தன. 12 ஆம் நூற்றாண்டு கி.பி 1190இல் மாவீரர் சலாஹுதீன் அய்யூபி அவர்கள் தீர்க்கமாக போராடி பாலஸ்தீனத்தை மீட்டெடுத்தார்கள். அதன் பிறகு 725 ஆண்டுகள் முஸ்லிம்களின் ஆளுகையில் பாலஸ்தீனம் இருந்தது 1924இல் உதுமானிய கிலாஃபத்தை கலைத்து மீண்டும் பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் சிலுவை யுத்த கொலைகாரர்களின் வாரிசுகள்.1914 -2014 - இப்போது 90 ஆண்டுகள் நிறைவு அடைந்து விட்டன.

முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் பாலஸ்தீன் வந்தபின்னர் யூதர்கள் தமது தனி தேசம் அமைக்கும் அரசியலுக்கான அடுத்த கட்ட பணிகளை தொடங்கி விட்டனர் .சதி ஏமாற்று நயவஞ்சகம் என்பன மூலம் முஸ்லீம் நிலங்கள் சூறையாட படுகிறது .இத்தகு குடியேற்றத்துக்கு மறைமுக ஆதரவை பிரித்தானிய அதிகாரம் வழங்கியது.


1917 டிசம்பர் 9 ம் திகதி பிரித்தானிய தளபதி அலன்பே பலஸ்தீனை கைப்பற்றிய அந்த பொழுதுகளில் இங்கிலாந்தில் அந்த பால்பர் பிரகடனத்தை வெளியிட்டார்கள் .யூதர்களின் நடவடிக்கைக்கு பின்னால் தொழிற்பட்ட அரசியலை இந்த ஒப்பந்தத்தின் மூலம் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.
ஆர்தர் பால்பர் எனும் பிரித்தானிய வெளிவிவகாரத்துறை செயாலாளர் மூலம் இது வெளிவிடப்பட்டதால் இது பால்பர் பிரகடனம் என அழைக்கப்படுகிறது .அது 'மாட்சிமை தாங்கிய இங்கிலாந்து மன்னரின் பெயரால் பாலஸ்தீனில் யூதர்களுக்கான தனி நிலப்பகுதி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதை உத்தியோக பூர்வமாக அறிவித்தது.


அதில் ஒரு பகுதி இப்படி சொல்கிறது 'இப்போது பாலஸ்தீனில் வசிக்கும் யூதர் அல்லாதோரின் பொது உரிமைகள் மற்றும் மத உரிமைகள் பாதுகாக்க படும் '!!! என கூறுகிறது இதன் அர்த்தம் அங்கு பூர்வீக குடிகளாக வாழ்கின்ற எவருக்கும் இனி அரசியல் உரிமைகள் கிடையாது ! யூதர்களுக்கு மட்டுமே அந்த ஆதிக்க உரிமை என்பதாக அந்த பால்பர் பிரகடனம் சொல்கிறது .நேர்மையான சரித்திர ஆசிரியர்கள் கூட இதை வடிகட்டிய அயோக்கியத்தனம் என கூறும் அளவுக்கு அந்த பிரகடனம் இருந்தது.


இதன் பின்னரே தமது துரோக அரசியலை யூதர்கள் பாலஸ்தீனில் தொடங்கினார்கள். ஒரு அரசை அமைக்கும் விவகாரங்களுக்கான பணிகள் தொடங்கின. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் யூதர்கள் அங்கு அழைத்து வரப்படுகிறார்கள். ஒரு நிலக் கொல்லைக்கு கொள்கை வகுத்து கொடுத்தது வல்லரசு பிரித்தானியா. அப்போதிருந்தே முஸ்லீம்களுக்கும் யூதர்களுக்குமான மோதல் தொடங்கி விட்டது. இத்தகு சண்டை விஸ்வரூபம் எடுத்தது நவம்பர் 29, 1947 ம் வருடம் ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலுக்கான அங்கீகாரத்தை அளித்த பின்னே ஆகும் . அன்றிலிருந்து அடுத்த ஆறு மாதங்களுக்குள் அதாவது 14 மே, 1948 இல் இஸ்ரேல் எனும் கள்ளப்பிறப்பு பிரகடனப் படுத்தப்பட்ட நாளுக்கிடையில் அங்கு இரத்த ஆறு ஓடியது, சர்வதேசம் தொடர்பான முஸ்லீம்களின் கடைசி நம்பிக்கைக்கும் இடி விழுந்தது ஐக்கிய நாடுகள் சபையின் அந்த முடிவே.


கிலாபா அரசினை வீழ்த்தி இஸ்லாமிய அரசியல் உலகை வெறும் தேசிய அரசுகளாக மாற்றிய பின்னர் சகோதரத்துவம் எல்லைப்படுத்தபட பாலஸ்தீன முஸ்லீம்கள் தனிமைபடுதப்பட்டார்கள். அவர்களுக்கு வன்முறையை கையில் எடுப்பதை தவிர மாற்று வழி இருக்கவில்லை. ஆனாலும் இஸ்ரேல் பிரகடனப்படுத்தபட்ட உடன் தேசியங்களாக இருந்த எகிப்து, சிரியா, ஜோர்தான் என்பன  அதற்கு எதிரான யுத்தப் பிரகடனத்தை செய்தன அதன் நோக்கம் பலஸ்தீனை காப்பது அல்ல, தமது தேசிய எல்லைகளை விரிவாக்கும் இன்னொரு துரோக அரசியலுக்காக ஆகும்.

பிரித்தானிய உளவாளியான 'லாரன்ஸ் ' கிலாபத்தை வீழ்த்துவதற்கான பிரதான பொறியை சவூதி அரேபியாவை பயன்படுத்தி வைக்கிறான் . இங்கு அரபி அஜமிக்கு கட்டுப்படுவதா!? என்ற கோத்திர வாதத்தை முன்வைத்த போது அது பற்றி எரியத் தொடங்கியது. அது மன்னரிச தேசியமாக வெற்றி கண்டது. இந்த அடிப்படையில் சுல்தானிசம் எனும் கருப்பு அரசியல் இஸ்லாமிய நிலத்தை துண்டாட காரணமாகியது.

முதலாம் உலகப்போரில் துருக்கியின் நிலைப்பாட்டை தமக்கு சாதகமாக பிரித்தானியா, பிரான்ஸ் என்பன பயன்படுத்தின. இப்படி இராஜதந்திர தலைவலிகள் உதுமானிய கிலாபாவுக்கு தொடங்கின. அப்போது இன்னொரு பேரிடியாக கிலாபா இராணுவத்தின் தளபதியாக இருந்த முஸ்தபா கமால் அதாதூர்க் என்பவன் மேற்கின் கைத்தடியாக மாறினான். அவன் தனது இராணுவ செல்வாக்கை பயன்படுத்தி கலீபாவை நாடுகடத்தினான். ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை சாதாரண ஜனநாயக குடியரசாக மாற்றினான். அதோடு கேடயம் அற்ற உம்மத்தாக முஸ்லீம்கள் மாற்றப் படுகிறார்கள். அது யூத தேசத்தை பாலஸ்தீனில் நிறுவும் சியோனிசத்தின் எதிர்பார்ப்புக்கு அடிக்கல் ஆகியது. முதலாளித்துவ ஏகாதிபத்தியங்கள் தமக்குள் கூட்டாக தமது சுரண்டலுக்காகவும் யூத தேசத்தின் நலனுக்காகவும் இப்பணியை செய்தன. யூதர்கள் பாலஸ்தீனில் உற்சாகமாக தமது எதிர்பார்ப்பை நோக்கி அடிவைக்கிறார்கள்.

இத்தகு நகர்வுகளோடு இரண்டாம் உலக மகாயுத்தம் முதலாளித்துவ ஏகாதிபத்திய தலைமையை பிரித்தானியாவிடம் இருந்து அமெரிக்காவுக்கு மாற்றி விடுகிறது. அத்தகு சூட்டோடு இஸ்ரேலின் தனிநாட்டு பிரகடனம் மே 14 ,1948 இல் நிகழ்ந்தது. இந்த பிரகடனத்துக்கு மறுநாள் அராபிய இஸ்ரேல் யுத்தம் தொடங்கியது. பலம் வாய்ந்த ஜோர்தான் இராணுவம், எகிப்து இராணுவம்,  சிரிய இராணுவம் என்பன கொதிப்போடு இருந்த பாலஸ்தீனர்களோடு இணைந்து இஸ்ரேலை எதிர்க்கத்  தலைப்பட்டன. ஒப்பீட்டு வலிமை ரீதியில் இஸ்ரேலுக்கு பலத்த சவால், முதல் சவால் !

ஆனால் இந்த முஸ்லீம் தேசிய அரசுகளின் நோக்கம் பாலஸ்தீனர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது அல்ல மாறாக எல்லை பிடிக்கும் அரசியலை கொண்டது. அதற்கு காரணம் அவர்கள் தலையில் இஸ்லாம், இஸ்லாமிய சகோதரத்துவம் எதுவும் இல்லை ;மாறாக அரபு தேசியவாதம் மட்டுமே இருந்தது. தமக்குள் தேசிய பிரிகோடு இஸ்ரேலை எதிர்ப்பதில் உடன்பாடு என்ற பலவீனம் இஸ்ரேலுக்கு சாதகத்தை அல்லாமல் பாதகத்தை ஏற்படுத்தவில்லை.
முஸ்லீம்களின் இந்த பலவீனமான கூட்டு இஸ்ரேலை பற்றி தப்புக்கணக்கு போட்டது. யுத்தத்தின் நகர்வுகளில் அது புரிந்தது. மிக இலகுவாக டெல் அவீவை ஊடறுத்து விடலாம் என கருதிய இவர்களை இஸ்ரேலின் எதிர் சமர் திகைக்க வைத்தது. அவர்கள் கையில் மினுமினுப்பான புதிய ஆயுதங்கள் ! அவை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து வந்திருந்தது ! அமெரிக்க ஆயுதங்கள் ! அதோடு இராஜ தந்திர உதவியும் கூட ! இப்படி காரண காரிய விதிகளை வெற்றி கொண்டயூத சைனியத்தை எதிர் கொள்வதில் தேசியவாதத்தால் பலவீனமான முஸ்லீம் இராணுவம் சூனியம் ஆனது .தீர்வு வரும் என நம்பிய பாலஸ்தீன முஸ்லீம்கள் ஏமாந்து போனார்கள்.


தமது சகோதரத்துவத்தையும், ஒரே தலைமையான கிலாபா அரசையும் இழந்ததன் விளைவுகளை முழு முஸ்லீம் உம்மத்தும் அனுபவித்தது. பாலஸ்தீனில் அந்த வேதனை பன்மடங்ககியது. போராடுவது முடிவு எப்படி !? எந்த பின்புலத்தில் போராடுவது !? எனும் கேள்விகளுக்கு விடை தெரியாமலே பாலஸ்தீனர்கள் போராடத் துணிந்தார்கள். உமர் (ரலி ) பைதுல் முகத்திசின் திறப்பை கிறிஸ்தவர்களிடம் இருந்து பெரும் சந்தர்ப்பத்தில். கிறித்தவர்கள் கேட்ட ஒரே வேண்டுகோள் "இதை எக்காரணம் கொண்டும் யூதர்களிடம் கொடுக்க கூடாது "என்பதே ! நூற்றாண்டு காலமாக அதை சத்தியத்தின் நிழலில் பாதுகாத்த அந்த வரலாறு முடிந்து போனது. அதன் பின் இந்தப் போராட்டம் 66 வருடங்களை முற்றாகவே விழுங்கி விட்டது.


வஞ்சித்தவனை நீதிபதியாக்கும் கேலிக்கூத்து அரசியலில் முஸ்லீம் தேசியங்கள் பல மகஜர்களையும், கோரிக்கைகளையும் ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கியுள்ளன. அதைனை ஒரு நாடகமாக ஐ.நா முன்வைக்க அமெரிக்காவும், பிரித்தானியாவும் வீட்டோவை போட்டு அதை உடைப்பதுதான் மிச்சம் !!!
புரிந்தவர்களும் புத்திஜீவிகளும் இன்றும் சர்வதேச அரசியல் எனும் இந்த கேலிக்கூத்தை நம்பியவர்களாகவே இருக்கிறார்கள். அரபு தேசியவாதம், அதன் விழுமியங்கள் மீறாது எமது பிரிவினைக்கு மத்தியில் பாலஸ்தீனத்துக்கு மட்டுமல்ல முஸ்லீம்களின் எந்த விவகாரத்துக்கும் தீர்வு காண முடியாது.


இன்னும் பாலஸ்தீன், இஸ்ரேல் எனும் இரு தேசியங்களை சகித்துப்போகும் வெட்கம் கெட்ட தோல்வி அரசியலும் பக்காவான கண் துடைப்பே! பாலஸ்தீன் என்பது இஸ்லாத்தின் சொத்து. அதில் குப்பாருக்கு உரிமையில்லை. எம் முன்னோர் இரத்தத்தை வியர்வையை அதற்காக நிறையவே இழந்துள்ளார்கள். அப்படி காத்த நிலத்தை காலனித்துவம் சூறையாடியது. நவகாலனித்துவ தேசிய அரசியல் வடிவில் அதை அவர்கள் வசம் வைத்திருக்க திட்டமிட்டு செயற்படுகிறது.


அதற்கு குடியரசாகவும், முடியரசாகவும் மாறியுள்ள உம்மத்தின் துரோகிகள் உடன்பட்டு போகிறார்கள் . இன்று கூட இம்முறை கட்டாரில் பெருநாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு காசாவுக்காக துக்கம் அனுஷ்டிப்பதாக தெரிவித்து இருப்பதும் நகைப்பானதே !! இது உணர்ச்சி மிகு முஸ்லீம் உம்மத்தை சாந்தப்படுத்தும் ஒரு அரசியல். நேற்று ரபாவில் முஸ்லீம்களை படுகொலை புரிந்த ஜெனரல் சீசி இன்று அவன் பாலஸ்தீன் போர் நிறுத்தத்துக்கு நடுவராக வருவதாக ! புதுக்கதை ஓட்டுகிறான்.


இன்னும் இதனையும் நம்புவதா முஸ்லீம் உம்மாவே !!! பாலஸ்தீனின் உண்மையான தீர்வு என்பது முஸ்லீம் உம்மத் தனது பிரிவினைகளை விட்டும் ஒன்று படுவதோடு ஒரே தலைமையிலான கிலாபா அரசை நபிவழியில் அமைப்பதில் தான் தங்கியுள்ளது. அது வெறும் ஆயுத வன்முறையை அடிப்படையாக கொண்ட பெயரளவு விடயம் அல்ல. நுஸ்ராவின் அடிப்படையில் உருவாக்கப்படுவது. தன்னிச்சையான ஓர் குழுவின் பிரகடனம் அல்ல. அது உமர் (ரலி ) அவர்களின் இராஜ தந்திரத்தோடு சலாஹுதீன் ஐயூபி (ரஹ்) அவர்களின் வீரத்தையும் சொல்லி நிற்பதாக பாலஸ்தீன் விவகாரத்தில் தீர்வுக்காக போராடும்.  இன்னும் அது முழு முஸ்லீம் உம்மத்தின் விவகாரங்களுக்ககவும் கேடயமாக இருக்கும்.


நன்றி-கிலாஃபத் இஸ்லாமிய செயலாக்க அமைப்பு


Post a Comment

Previous Post Next Post

Contact Form