இஸ்ரேலை ஒரு பயங்கரவாத
நாடாக பொலீவியா அறிவித்துள்ளது. இவ் உத்தியோகபூர்வ அறிவிப்பை அந்நாட்டின் ஜனாதிபதி
எவோ மோரேல்ஸ் அறிவித்துள்ளார். இஸ்ரேலியர்களுக்கு வீசா இல்லாமல் பொலீவியாவில்
சுதந்திரமாகப் பயணம் செய்யமுடியும் என்ற 1972ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் , பொலீவியா செய்து கொண்ட வீசா ஒப்பந்தத்தை தாம்
முறித்துக்கொள்வதாகவும் பொலீவியா ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அமைச்சரவை
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினைத் தொடர்ந்தே மேற்படி அறிவிப்பபு
வெளியாகியுள்ளது. காஸாவின் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் மிருகத்தனமான தாக்குதலை
எதிர்த்து ஏனைய இலத்தீன் அமெரிக்க நாடுகளான சிலி,எல்சவடோர் போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கான தமது
தூதுவர்களை நாட்டுக்கு அழைத்துள்ளனர். இதனைப் பின்பற்றி பிரேசில்,ஈக்குவடேர் மற்றும் பெரு ஆகிய நாடுகளும் தமது
தூதுவர்களை மீள அழைத்துள்ளனர்.
Tags
உலகம்
Masha Allah
ReplyDelete