SIPRI(Stockhom International Peace Research Institute) இன் கணிப்பின் படி 2006ம் ஆண்டில் மட்டும் உலக நாடுகள் இராணுவ நடவடிக்கைகளுக்காக
1024 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளன.
இதில் 83% இனை 15 நாடுகள் மட்டுமே செலவலித்துள்ளன. இந்த 15 நாடுகளில் முதலிடத்தைப் பிடித்திருப்பது அமெரிக்காவாகும்.
மேலும் உலகில் இராணுவத் தளபாடங்களை உற்பத்தி செய்து வினியோகிக்கும் பணிகளில் ஈடுபடும்
100 கம்பனிகளில் 40 கம்பனிகள் அமெரிக்காவுக்கு சொந்தமானவை. இவை உலக
நாடுகளின் ஆயுதத் தேவையில் 63% நிறைவு செய்கின்றன.
இவ்வாறு உலகில் ஆயுத
உற்பத்தி, விற்பனையில் ஜாம்பவானாக திகழும் அமெரிக்காவின் ஆயுதக்
கிடங்காக இஸ்ரேல் காணப்படுகிறது. உலக சனத்தொகையில் 1000-1 என்ற வீதத்தைக் கொண்ட இஸரேலுக்கு, அமெரிக்கா 1/3 பங்கு இராணுவ உதவியினைச் செய்து வருகிறது. 2009க்கு முந்திய 10 ஆண்டுகளில் மட்டும் 17 பில்லியனுக்கும் அதிகமான “உபரியான” இராணுவ உதவிகளை அமெரிக்கா செய்துள்ளது.
1996-2005 வரைக்கும் 10.19 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்கள் பெண்டகன்
மூலம் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு அமெரிக்க
வரவு-செலவு திட்டத்தில் 2.24 பில்லியன் டொலர்கள்
இஸ்ரேலுக்காக ஒதுக்கப்பட்டது.
மேலும் அமெரிக்காவின்
முன்னனி ஆயுதக் கம்பனிகள் தயாரிக்கும் நவீனரக ஆயுதங்கள் அதிகம் விற்பனை செய்யப்படுவது
இஸ்ரேலுக்கே.
2ம் உலக யுத்தம், கொரிய மற்றும் வியட்நாம்
போர் என்பவற்றில் அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதங்களை விடவும் இத்தொகை அதிகம் என்பது
ஆய்வாளர்களின் கணிப்பு. குறிப்பாக பலஸ்தீன மக்களின் வரலாற்றில் இரத்தக்கரை படிந்த சம்பவங்களாக
இடம்பெற்ற 1967 அரபு-இஸ்ரேல் யுத்தம், 1980 லெபனான்-இஸ்ரேல் யுத்தம்,
1982 இல் 9000 க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்ட
ஷப்ரா-ஸாதிலா அகதி முகாம் மீதான தாக்குதல், ரபாஃ படுகொலைகள், இஸ்ரேல்-ஹிஸ்புல்லா
மோதல் போன்ற அனைத்திற்கும் பயண்படுத்தப்பட்டவை இஸ்ரேல் கிடங்கிலுள்ள அமெரிக்காவின்
ஆயதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை
வழங்கும் முக்கிய 3அமெரிக்க நிறுவனங்கள்:
1.Boeing
2.Lokheed Mortin
3.United Technologies
2001 தொடக்கம் 2007 வரையான காலப்பகுதியில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கிய
ஆயுதங்கள்
2001 தொடக்கம் 2007 வரையான காலப்பகுதியில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கிய
நிதியுதவிகள்
இஸ்ரேலுக்கு நிதியுதவிகள் வழங்கும்
நிறுவனங்கள்
தகவல் :
1.Center For Free Palestine
2.சுதந்திர பலஸ்தீனத்துக்கான மையத்தினால் 2009. இல் வெளியிடப்பட்ட “இரத்தம் கசியும் ஈமானிய தேசம்” எனும் புத்தகம். பக்கம் 45-48
1.Center For Free Palestine
2.சுதந்திர பலஸ்தீனத்துக்கான மையத்தினால் 2009. இல் வெளியிடப்பட்ட “இரத்தம் கசியும் ஈமானிய தேசம்” எனும் புத்தகம். பக்கம் 45-48
Tags
உலகம்