காஸா: கடந்த 19 தினங்களாக காஸா மக்கள்
மீது இஸ்ரேல் தொடர்ந்த
பயங்கரவாதத்
தாக்குதல்களில் ஷஹீதான
காஸா மக்களின் எண்ணிக்கை
ஆயிரத்தைத் தாண்டியிருக்கின்றனர், காயப்பட்டோர் 5870 பேர்
என்ற செய்தியினை அறியும்
எவரும் கண்களங்காமல் இருக்கப்போவதில்லை! 40 இஸ்ரேலியர்கள்
கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இவர்களுள் இருவர் பொதுமக்கள், ஒருவர்
தாய்லாந்து பணியாளர்
ஏனையோர் இராணுவத்தினர் என
இஸ்ரேல்
உறுதிப்படுத்தி
இருக்கின்றது.
இருதரப்புக்கும்
இடையில் மனித நேய தொண்டர் நிறுவனங்கள் மேற்கொண்ட
பேச்சுக்களையடுத்து, இருதரப்பும் 12 மணிநேர யுத்த
நிறுத்தத்தை கடைப்பிடித்துவருகின்ற
நிலையிலும், காஸாவில்
தொடர்ந்தும் பதட்ட நிலையே காணப்படுவதாக
களத்தில் நிற்கும்
தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள்
அறிவித்துக்கொண்டிருக்கி
ன்றனர்.
ஆயிரம் பேரை இழப்பது ஓர்
பிரதேசத்திற்கு எத்தகைய மன
உளைச்சல்களையும், எதிர்காலச் சந்ததியினரையும்
பாதிக்கும் என்பதை எம்மால் வரையறை செய்ய முடியாது. காஸா என்ற
நகரமே இல்லாமல்
அங்கு கட்டடங்கள்
அழிக்கப்பட்டிருக்கின்றன.
பள்ளிவாயல்கள், பாடசாலைகள் மற்றும்
பாதுகாப்பான தங்குமிடம்
என்று எதுவுமில்லை.
குழந்தைகளைக் கையிலேந்தி, சிறுவர்களை அரவணைத்து, பாதுகாப்பில்லாத
கட்டடங்களில் தாய்மார்கள்
கண்ணீர்வடித்துக்
கொண்டிருக்கின்றனர்.
பரிதாப நிலையைக் காண
எமது கண்கள் கண்ணீரால்
தடுக்கின்றன.
19 நாட்களாகத்
தொடர்ந்த இஸ்ரேலின்
பயங்கரவாதத் தாக்குதலில்
காயமடைந்தவர்கள்
ஆராயிரத்தைத் தாண்டுகின்ற
ஆபத்தான
நிலையே காஸா
மருத்துவமனையில்
காணப்படுகிறது.
காயப்பட்டவர்கள் என்போர்
சிறுகாயம் என நாங்கள் ஊகிக்கக்கூடாது. உடல்
உறுப்புக்கள் சிதைந்த, கழட்டப்பட்ட, பாதிக்கப்பட்ட
நிலையிலுள்ளவர்களே இந்த
காயப்பட்டவர்களின்
எண்ணிக்கைக்குள்
உள்ளடங்குகின்றனர்.
அதாவது மரண விளிம்பில்
போராடிக்கொண்டிருப்பவர்
களே அதிகமாவர்.
நிலைமை இவ்வாறிக்கையில், தாங்கள் இஸ்ரேலின் எவ்விததத்
தாக்குதல்களுக்கும்
தயாராகவும், தொடர்ந்து போராடும்
தகுந்த நிலையிலே
இருப்பதாகவும் ஹமாஸ் தலைவர் ஹாலித் ஊடகங்களுக்குத்
தெரிவித்திருக்கிறார்.
Tags
உலகம்