(Baskar
Jayaraman)
கால்களையும், பாதங்களையும்
சுத்தமாக பராமரித்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். நடக்கும் போது முழுப்
பாதத்தையும் தரையில் பதியும்படி வைத்து அழுத்தமாக ஊன்றி நடக்க வேண்டும். அப்படி
செய்தால் கால்களில் நன்றாக ரத்த ஓட்டம் பரவி விரல்களும் பாதங்களும் நன்றாக
விரிந்து வளரும். கால் தசைகள் உறுதியாகும். உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக பரவி
புத்துணர்ச்சி பிறக்கும்.
கால்களில் காலணிகளை
அணியாமல் மணல் வெளியிலும், புல் தரையிலும் வெறுங் காலுடன் நடப்பது நல்லது.
எப்பொழுதெல்லாம்
சாத்தியப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் இப்படி வெறுங்காலுடன் நடந்து பழக வேண்டும்.
அப்பொழுதுதான் கால்களுக்கும் பாதங்களுக்கும் சூரிய ஒளியும் இயற்கை காற்றும்
கிடைக்கும்.
மேலும், கால்களில்
ஷூ அல்லது செருப்பு அணிவதால் கால்களுக்கு உண்டாகும் சிரமங்களும் குறையும்.
கால்களில் வியர்வை சுரப்பிகள் அதிகம் உள்ளதால் வியர்வை அதிகமாக சுரந்து வியர்வை
நாற்றம் இருக்கும். அதனால் கால் உறைகளை (சாக்ஸ்) அடிக்கடி மாற்ற வேண்டும். காலணிகளை ஆல்கஹால் கொண்டு சுத்தமாக துடைத்து வெயிலில் காய
வைப்பது நல்லது.
நைலான் சாக்ஸ்களை அணிவதை
தவிர்த்து வியர்வையை உறிஞ்ச கூடிய பருத்தி சாக்ஸ்களை அணிவதே சிறந்தது. மிகவும்
இறுக்கமான ஷூ போடும் போது உராய்வினால் கால்களில் காய்ப்புகள் ஏற்படும். அதை
தவிர்க்கவும், அது மேலும் மேலும் தடித்து போகாமல் இருக்கவும் தகுந்த
சிகிச்சை பெற வேண்டும். எக்காரணம் கொண்டும் கால் ஆணிகள், காய்ப்புகள்
ஆகியவற்றை டாக்டரின் ஆலோசனையில்லாமல் கிழித்துவிட கூடாது. அப்படி செய்தால் பெரிய
தீங்குகளில் கொண்டு போய் விடக்கூடும்.
இரவில் உறங்க செல்லும்
முன்னர் இளம் சூடான வெந்நீரில் இரண்டு ஸ்பூன் உப்பு சேர்த்து கால்களை ஐந்து
நிமிடம் வைத்திருந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவி துடைத்து “யூடிகொலன்’ தடவி
வந்தால் பாதங்கள் மென்மையாகும்.
வெந்நீரில் உப்பும், டெட்டாலும்
சேர்த்து பாதங்களை கழுவினால் கால்களில் தொற்றி கொண்டுள்ள கிருமிகளும் அழுக்குகளும்
வெளியேறும். இரவில் நன்றாக தூக்கம் வரும்.
குளிக்கும் போது கால்விரல்
நகங்களை சோப்பு போட்டு, உபயோகிக்கப்படாத டூத் பிரஷ்ஷால் தேய்த்தும்
கால்விரல்களையும், பாதங்களையும் “ஸ்பாஞ்சால்’
தேய்த்தும்
சுத்தப்படுத்தினால் அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும்.
இளம் வயதிலேயே சிலருக்கு
பாதங்களில் வெடிப்பு தோன்றிவிடும். சிலருக்கு இது நிரந்தரமாகி பாதங்களை
விகாரமாக்குவதோடு உபத்திரவமும் கொடுக்கும். இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டால், ஒரு
வாயகன்ற பாத்திரத்தில் மிதமான வெந்நீரை நிரப்பி அதில் பாதங்களை மூழ்கும்படி வைத்து
இருக்க வேண்டும்.
பத்து நிமிடங்கள் கழித்து
பாதங்களை வெளியே எடுத்து நன்றாக துடைத்து,
சிறிது கிளிசரின், ஒரு
தேக்கரண்டி பன்னீர், சிறிது எலுமிச்சைச்சாறு இவற்றை நன்றாக கலந்து பாதங்களில்
தடவி வந்தால் பாதவெடிப்பு மறைந்து பாதங்கள் அழகுபெறும்.
மழைக்காலங்களில் கால்
விரல்களின் இடுக்குகளில் எரிச்சல் உண்டாகும். அதை தடுக்க வெளியில் சென்று வந்த
பின்னர் உப்பு கலந்த நீரில் காலை நன்றாக கழுவி தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளை
போட்டு குழைத்து இரவில் பாதங்களின் மேல்புறமும் விரல் இடுக்குகளிலும் பூசி
வைத்திருந்து காலையில் கழுவினால் பாதங்களில் ஏற்பட்ட எரிச்சல் குணமாகும்.
சூரியகாந்தி எண்ணெயை
கால்களில் தடவி வந்தால், கால் நகங்களில் சிதைவு ஏற்படாமல் தவிர்க்கலாம்.
வாரம் ஒருமுறை
விளக்கெண்ணெயை கால்களில் தடவி ஊறிய பின் கழுவி வந்தால் கால்களில் சுருக்கம்
வராமலும் பளபளப்பாகவும் இருக்கும்.
கடுக்காயை அரைத்து
பாதங்களில் தடவினால் சேற்றுப்புண் குணமாகும்.
காய்ச்சிய வேப்ப எண்ணெயை
தடவி வந்தாலும் சேற்றுப்புண் குணமாகும்.
வேப்ப எண்ணெயில் மஞ்சள்
பொடி கலந்து தடவி வந்தால் கால்களில் ஏற்பட்ட பித்தவெடிப்பு குணமாகும்.
மருதாணி இலையை அரைத்து
அதில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து பாதத்தில் போட்டு ஐந்து மணி நேரம் கழித்து
வெந்நீரில் கழுவினால் பாத எரிச்சல் தீரும்.
மஞ்சள் தூளைத் தேனில்
குழப்பி கால் இடுக்குகளில் தடவி வந்தால் சேற்றுப் புண் குணமாகும்
Tags
ஆரோக்கியம்
.jpg)