மஹரமின்றி பெண்களை ஹஜ்ஜூக்கு அழைத்து வரும் விமான நிறுவனங்களுக்கு அபராதம் - சவுதி அரசாங்கம் கடும் எச்சரிக்கை


இந்த எச்சரிக்கையை மீறும் விமான சேவைகள் மீது 50,000 சவூதி ரியால் அபராதம் விதிக்கப்படும் என்றும், அப்பெண்கள் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்படுவர் என்றும், அதுவரை அவர்கள் தங்குவதற்கான செலவையும் விமான சேவையே ஏற்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வருடம் தோறும் இவ்வாறு வரும் பென்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும், இதற்கெல்லாம் அந்தந்த நாடுகளில் ஹஜ்ஜூக்கு ஆள் அனுப்பும் ஏஜென்டுகளே காரணம் என்றும் சவுதி அரேபியா ஹஜ் அமைச்சகம் கூறுகிறது.

விமான நிறுவனத்தின் மீது விதிக்கப்படுகின்ற இந்த அபராதம் அனைத்தையும் மேல்படி பயணிகளிடமே விமா நிறுவனம் திணிக்கிறது. அவற்றை செலுத்தாமல் அவர்கள் அங்கிருந்து நகர முடியாது. அதுவரை விமான நிலையத்தில் தங்க வைத்து விடுவர். 

ஹஜ்ஜையும். செய்யாமல், இரட்டிப்பு செலவுகளை செய்து, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகும் இந்த செயல் தேவையா ?. 

இப்படியா ஹஜ் செய்யச் சொல்கிறது இஸ்லாம் சிந்திக்க வேண்டாமா ?.

ஹஜ் ஏஜென்டுகள் தயார் செய்யும் போலி ஆவணங்களின் அடிப்படையில் ஹஜ் செய்ய வந்து இதுபோன்று மாட்டிக்கொள்ளும் பெண்கள் சிந்திக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான் :
அதில் தெளிவான சான்றுகளும், மகாமே இப்ராஹீமும், உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏகஇறைவனை) மறுத்தால் அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவைகளற்றவன்.திருக்குர்ஆன்.3:97


Post a Comment

Previous Post Next Post

Contact Form