நாட்டின் 438 பொலிஸ் நிலையங்களையும் இணைக்கும் VPN வலையமைப்பு ஆரம்பிப்பு



இலங்கையிலுள்ள 438 பொலிஸ் நிலையங்களையும் ஒரு வலையமைப்பில் ஒன்றிணைக்கும் நவீன VPN (Virtual Private Network) வலையமைப்பு நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க ப்பட்டுள்ளது. புதிய வலையமைப்பை பொலிஸ்

மா அதிபர் என். கே. இளங்ககோன் பொலிஸ் தலைமையகத்தில் வைத்து ஆரம்பித்து வைத்ததோடு அங்கு உரையாற்றியுள்ள அவர்:

VPN தொழில்நுட்பத்தினூடாக இலங்கையிலுள்ள 438 பொலிஸ் நிலையங்களும் ஒரே வலையமைப்பில் இணைக்கப்படுகிறது. இதுவரை 361 பொலிஸ் நிலையங்கள் இதில் உள்வாங்கப்பட்டுள்ளதோடு எஞ்சிய பொலிஸ் நிலையங்கள் விரைவில் இதில் இணைக்கப்படும்.

VPN தொழில் நுட்பத்தினூடாக சந்தேக நபர்களின் விரல் அடையாளங்களை பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி துரிதமாக பரீட்சித்து பெறுபேறுகளை பெறலாம். தொல் வாய்ப்பு மற்றும் தேவைகளுக்காக பொது மக்களுக்கு விரல் அடையாளங்களை வழங்கும் நடவடிக்கைக்கான காலம் குறைவடையும்.

இது தவிர சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை கொழும்புக்கு வரவழைக்காது தொர்புகொள்ளவும் எந்த புதிய தொழில் நுட்பம் உதவுகிறது. வீடியோ அழைப்பினூடாக தொடர்புகொள்ளவும் வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் இன்ஸ்பெக்டர் பதவியில் இருந்து உயர் பதவி வரையுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு கையடக்கத் தொலைபேசிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதனூடாக உயர் பொலிஸ் அதிகாரிகளை கட்டணமின்றி துரிதமாக தொடர்புகொள்ள முடியும் தொலைபேசிக்கான செலவும் குறையும்.எனவும் பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form