காஸாவின் ஜபலியா நகரில்
இருந்த பல நூறு வருடங்கள் பழமைவாய்ந்த அல-ஒமரி பள்ளிவாயல் கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேலின்
வான் தாக்குதலால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிவாயல் கி.பி 647 இல் இருந்து அங்கு காணப்படுவதாக நம்பப் படுகிறது.
மேலும் இந்த பள்ளிவாயலின்
முகப்பு வாயில் மற்றும மினாரா என்பவை மம்லுக் காலத்தைச் சேர்ந்வையாக அல்லது 500 ஆண்டு காலம் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை
மட்டும் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு காஸாவின் 5 பள்ளிவாயல்கள் மீது இஸரேல் வான் தாக்குதலை நடத்தியிருந்தது.
அதில் பள்ளி முஅத்தின் ஒருவரும் கொலை செய்யப்பட்டிருந்தார்.
Tags
உலகம்