சீனாவின் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சிங்ஜியாங் மாகாணத்தில் உள்ள சீனாவின்
மஸ்ஜித்களில் மிகப் பெரியதாக கருதப்படும், 600 ஆண்டுகால பழமைவாய்ந்த “ஈத் கா” மஸ்ஜிதின் தலமை இமாமாக பணியாற்றிக் கொண்டிருந்த; சீனா முழுவதும் மிகப்பிரபலமான இமாமாக கருதப்பட்ட ‘ஜுமே தாஹிர்’ என்பவரை கடந்த புதன்கிழமை மஸ்ஜிதுக்குள் புகுந்த 3வர் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
கொலையாளிகள் இருவர் போலிசாரால் சுட்டுக் கொள்ளப்பட்டதாகவும் மற்றவர் உயிருடன் பிடிபட்டுள்ளதாகவும
சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.
சீன அரசு மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் மிக நெருக்கமான உறவுகளை கொண்டிருந்த இவரை
உய்குரவாதிகள் தான் கொலை செய்திருக்க வேண்டும் என உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் உள்ள மஸ்ஜித்களின் இமாம்களை சீன அரசாங்கமே நியமித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Tags
உலகம்