அமெரிக்காவின் நியுயோர்க்கை
மையமாக கொண்டு இயங்கும் யூத காங்கிஸ் அவையினால் வழங்கப்பட்ட விருதை ரஜப் தய்யுப் எர்துகோன்
திருப்பியளித்துள்ளார்.
இஸ்ரேலை எரதுகோன்
கடுமையாக விமர்சிப்பதாகவும், யூதர்களுக்கு எதிராக துருக்கியர்களை வன்முறைக்கு
தூண்டுவதாகவும் இந்த அமைப்பு கடந்த வாரம் குற்றம் சாட்டியிருந்ததுடன், மத்தியகிழக்கு அமைதிக்காக
தம்மால் வழங்கப்பட்ட விருதினையும் திருப்பி தரும்படி அந்த அமைப்பு கோரியிருந்தது.
அந்தவகையில் எர்துகோன்
பெருமகிழ்ச்சியுடன் அதை செய்வார் என்றும்ää காஸா மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேலின் செயற்பாடுகளை
பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் அமெரிக்காவுக்கான துருக்கித் தூதுவர் கூறியுள்ளார்.