ஒட்டுமொத்த உண்மையான சகோதரத்துவ உணர்வுள்ள உலக முஸ்லிம்களின் ஒரே எதிர்ப்பார்ப்பு இதுதான்!



(Mohamed Mifraj)
Gaza எனும் வீரச் சிங்கம் இஸ்ரேல் எனும் காளையை வேட்டையாட வேண்டும்!
இன் ஷா அல்லாஹ்!

பலஸ்தீனியர்கள் தனி நாடு கேட்டு போராடவில்லை தாய் நாட்டை கேட்டு போராடுகிறார்கள்..

யா அல்லாஹ் அநீதிக்கு எதிரான போரில் பாலஸ்தீன போராளிகளின் பாதங்களை பலப்படுத்துவாயாக..

பாலஸ்தீனர்களுக்கு வெற்றியை கொடுப்பாயாக..

காஸா மக்கள்..!!

உண்ண உணவில்லை, இருக்க இடமில்லை
உடுக்க உடை இல்லை.


பசியால் அழும் பிள்ளைகளுக்கு
கொடுக்க பால் இல்லை.

வாழும் உயிருக்கோ- எப்பொழுதும்
உத்திரவாதம் இல்லை.

உலக மக்களுகோ - எங்களின்
துயரம் வாய்க்கு அவலாக.

தன் வீட்டு கதவு உடையாத வரை
கவலை பட ஏதுமில்லை.

அள்ளி கொடுத்த கைகள்- இன்று
கொடுக்கும் கைகளை எதிர்பார்த்து

கொடுக்கும் கைகளுக்கு- இது
ஜக்காதா, சதகாவா என்ற கேள்வி

அல்லாஹ் விரும்புவது எல்லாம்
கொடுக்க வேண்டும் என்றே

அதன் பொருட்டே அவனின்
கணக்குகள் எல்லாம்

அள்ளி கொடுக்கா விட்டாலும்
கிள்ளியாவது கொடுங்கள்

எம் பிள்ளைகளின் ஒரு வேளை
உணவுக்கும், மருந்துக்கும் ஆகும்

படைத்தவனுக்கு தெரியும் - அதற்கான
கூலி எதுவென.

Post a Comment

Previous Post Next Post

Contact Form