அப்பாவி பாலஸ்தீன மக்களை கொன்றுக் குவிக்கும் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்


அப்பாவி பாலஸ்தீன மக்களை கொன்றுக் குவிக்கும் இஸ்ரேலை கண்டித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH), இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO), வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியா(WPI) சார்பில் 21/07/2014 மாலை 5 மணிக்கு திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பயங்கரவாத இஸ்ரேல் பாலஸ்தீனர்கள் மீது நடத்தி வரும் இனப்படுகொலையை இந்திய அரசு வன்மையாகக் கண்டிக்க வேண்டும். இஸ்ரேலுடனான உறவுகள் அனைத்தையும் துண்டிக்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் முழங்கப்பட்டது.
JIH திருச்சி மாநகர தலைவர் ஜனாப். G. சையது முஹம்மது, SIO திருச்சி மாநகர தலைவர் Br. ஷேக், SIO கரூர் மாநகர தலைவர் Br. ஜெய்லானி, WPI திருச்சி மாவட்ட தலைவர் ஜனாப். பஷீர் அஹமது, தந்தை பெரியார் கழக மாவட்ட செயலாளர் தோழர் சரவணன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் ஸ்ரீதர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்

Post a Comment

Previous Post Next Post

Contact Form