(Mohideen Ahamed Lebbe)
தனிமனிதர்கள் மாறினால் சமூகம் மாறிவிடும் எனும் கருத்து இன்று பரவலாக உணரப்படும் ஒரு சிந்தனையாகும். இது அடிப்படையில் முதலாளித்துவச் சிந்தனையின் “சமூகம்” தொடர்பான அடிப்படை எண்ணக்கருவாகும். ஏனெனில் இவர்கள் தனிமனிதனை அடிப்படையாகக் கொண்ட வாழ்வொழுங்கை (life System) முன்வைக்கும் சிந்தனைப் போக்குடையவர்கள்.
உண்மையில் இஸ்லாம் தனிமனிதனுக்குள் காணப்படும் உணர்வுகளையும் அதனை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய சிந்தனைகளையும் தனிமனிதனுக்குள் “குர்ஆன் சுன்னா அடிப்படையில்” ஒழுங்குபடுத்தும் வாழ்வொழுங்கை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தும் “ஒரு வாழ்க்கைச் சித்தாந்தம்” என்பதனை ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் உணரவேண்டும்.
இவ்வாறு சமூகமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு முஸ்லிமின் உணர்வையும், சிந்தனையையும் இஸ்லாமிய வரையறைக்குள் வைத்துக்கொண்டு வாழ்வில் இஸ்லாத்தை கடைப்பிடித்து ஒழுகிட அதற்கான வாழ்வொழுங்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு மனிதனது வாழ்வொழுங்கை (Systems)) நடைமுறைப்படுத்த அவசியம் அரசு இருக்கவேண்டும். ஏனெனில் இதனை நடைமுறைப்படுத்த அவசியம் அதிகாரம் தேவை.
ஒரு நாட்டினது அரசு குப்ரிய சிந்தனையில் கட்டியெழுப்பப்பட்டு அச்சிந்தனையை அடிப்படையாக கொண்ட அரசியல், பொருளியல், சமூகவியல் மற்றும் கல்விஒழுங்கை நடைமுறைப்படுத்தும் வேளையில் ஒரு முஸ்லிம் தனது தனிப்பட்ட வாழ்வை குர்ஆன் சுன்னாவின்படி முடிந்தளவு ஒழுங்குபடுத்தினாலும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் இஸ்லாமிய சரீஆவை அவனால் அமுல்படுத்த முடியாது என்பது ஒரு பொதுவான உண்மை.
இந்நிலையில் அவனது வாழ்வில் ஹறாம் ஹலாலை பின்பற்றி வாழ்வது ஒரு சவாலாக மாறிவிடும். அவன் வாழும் சமூகம் அவ்வரசினால் அச்சுறுத்தப்படும் நிலைக்குத் தல்லப்படுவான்.