கடந்த ஒரு மாத காலமாக
பலஸ்தீன் காஸா பிரதேசத்தில் தொடர்ச்சியாக இஸ்ரேலிய யூத எஹூதிகளினால்
மேற்கொள்ளப்பட்டுவரும் மிலேட்சத்தனமான தாக்குதல்கள் காரணமாக அன்புக் குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கு
அதிகமான நமது சகோதரர்கள் ஸஹீதாக்கப்பட்டும், பல்லாயிரக்கனக்கானோர் படுகாயமடைந்தும், பல இலட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளதையும்
தாங்கள் அறிவீர்கள்.
புனித றமழான் மற்றும்
பெருநாள் தினங்களென்றும் பாராமல் இம் மிலேச்சத்தனமான தாக்குதல்களை இஸ்ரேல்
இராணுவம் மேற்கொண்டதை நாம் இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.
நமது பலஸ்தீன
சகோதரர்களுக்காக நாம் ஒவ்வொருவரும் ஐவேளை தொழுகைகளில் பிரார்த்திப்பதோடு, அமேரிக்க இஸ்ரேலிய உற்பத்திப் பொருட்களான கொக்க
கோலா, பெப்ஸி, நெஸ்லே போன்ற உற்பத்தி பொருட்களையும் அந்நாட்டின்
ஏனைய உற்பத்தி பொருட்களை வாங்குவதையோ,
விற்பதையோ முற்றாக
தவிர்ந்து கொள்ளுமாறும் அதனால் கிடைக்கும் வருமானங்கள் அனைத்துமே எமது முஸ்லிம்
சமூகத்தை அழிப்பதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் நாம் கவனத்திற்
கொள்ளவேண்டும்.
எனவே மேற்கூறிய
நடைமுறைகளைப் பின்பற்றுமாறு காத்தான்குடி சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி-newsbes.net
Tags
இலங்கை