உலகில் தீவிரவாத நாடு இஸ்ரேல்தான்-துருக்கி அதிபர் எர்துகான்


உலகில் தீவிரவாத நாடு இஸ்ரேல்தான். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் காசாவில் பயங்கரவாதத்தை அந்நாடு தான் நிகழ்த்தி வருகிறது - துருக்கி அதிபர் எர்துகான்.

பாலஸ்தீனத்தில் மேற்கு கரையில் வாழும் மக்களுக்கும் காசாவில் வாழும் மக்களுக்கும் பில்லியன் கணக்கில் டாலர்களை தந்து உதவும் நாடு கத்தார்.

கத்தார் அமீர் தமீமும், அவரது தந்தை ஹம்தும் பாலஸ்தீனத்துக்க பன்னெடுங்காலமாக உதவி வருகிறார்கள்.

மேலும் உலகெங்கும் இஸ்லாமிய நாடுகள் மற்றும் முஸ்லிமல்லாத நாடுகளில் ஆட்சியாளர்களால் துன்புறுத்தப்படும் இஸ்லாமிய அறிஞர்களுக்கு கத்தார் தான்
அடைக்கலம் தருகிறது.

எகிப்து ஆட்சியாளர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட டாக்டர் கர்ளாவி, சவூதி அரசினால் விரட்டப்பட்ட டாக்டர் அஹ்மரி ஆகியோருக்கு கத்தார் தான்
அடைக்கலம் தந்து அவர்களை வைத்து உம்மத்துக்கு கல்வி ஆராய்ச்சிகளை வழங்கி வருகிறது.

மேலும் ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அல், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசின் பிள்ளைகள் மற்றும் எகிப்து இக்வான்களுக்கு கத்தார் தான்
அடைக்கலம் தந்து உதவி வருகிறது. இக்வான்களுக்கும், ஹமாசுக்கும்
கத்தார் செய்து வரும் உதவிகள் சாதாரணமானவை அல்ல.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்ப .‘உலகில் தீவிரவாதிகளுக்க பெருமளவு பண உதவி செய்யும் நாடு கத்தார்’ என்று இஸ்ரேல் ஜனாதிபதி சிமன்பெரஸ் கத்தாரை கடுமையாக சாடினார்.


பெரசுக்கு பெரசுக்கு எர்துகான் பதிலடி!

நேற்று 24.07.14 நிருபர்கள் பேட்டியில் எர்துகான் கூறியதாவது., கத்தார்
தீவிரவாத நாடும் அல்ல. தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடும் அல்ல.
அது அடக்கி ஒடுக்கப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் தான்
உதவி வருகிறது.

உண்மையில் உலகில் தீவிரவாத நாடு இஸ்ரேல் தான். எவ்வளவோ எடுத்துச்
சொல்லியும் காசாவில் பயங்கரவாதத்தை அந்நாடு தான் நிகழ்த்தி வருகிறது.


இஸ்ரேல் போன்று சிவிலியன்களை கொல்லும் அறிவற்ற செயல்களில் கத்தார் என்றைக்காவது ஈடுபட்டுள்ளதா?


கத்தாரும் நாங்களும் (துருக்கி) ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதை நிறுத்த மாட்டோம். எதனைக் கூறி களங்கப்படுத்த முயன்றாலும் சரி.

மேலும் எர்துகான் இப்படிக் கேட்டார். உங்களைப் போன்று சிவிலியன்களை கொல்லும் அறிவற்ற செயல்களில் கத்தார் என்றைக்காவது ஈடுபட்டுள்ளதா?

Post a Comment

Previous Post Next Post

Contact Form