இலங்கையின் வெளிநாட்டு அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் இஸ்ரேவேலுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளது - தயான் ஜயதிலக


கொழும்பில் 4 இஸ்ரேவேலிய நிலையங்கள் இயங்குகின்றன. இதுவரை 1000க்கும் மேற்பட்ட சிங்கள பெண்கள் இந் நிலையங்கள் ஊடாக விசா பெற்று அங்கு பணிப்பெண்களாக தொழில் பெற்றுச்சென்றுள்ளனர். 25000க்கும் மேற்பட்ட சிங்கள ஆண்கள் அங்கு தொழில்புரிகின்றனர். வருடா வருடம் ஊடகவியலாளர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் என பல பிரிவினர்களுக்கு புலமைப்பரிசில்பெற்று இஸ்ரேவேலுக்குச் செல்கின்றனர்.

வெளிநாட்டு அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் இஸ்ரேவேலுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டுள்ளது. அண்மையில் சிகல உருமைய கட்சியின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இஸ்ரேவேல் நாட்டுக்குச் சென்று வந்தார். நான் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேவேல் நாட்டுக்கு எதிராக பேசியதற்காக பாதுகாப்பு உயர் அதிகாரி எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார். இஸ்ரேவேல் பற்றி பேச நீ யார் ? எனக் கேட்டிருந்தார். ஜனாதிபதி இஸ்ரேவேல் நாட்டுடன் கொண்டுள்ள தொடர்பை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

காசாவில் பலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்ற இஸ்ரேலுடன் இலங்கை அண்மைக்காலமாக ஏற்படுத்திய இராஜதந்திர தொடர்புகளை நிறுத்த வேண்டும் என இலங்கை பலஸ்தீன் நட்புறவு அமைப்பு ஊடாக இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாக முன்னாள் ஜ.நா. தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form