பலஸ்தீனின் காஸா பகுதியில் பொதுமக்கள் மீது
மேற்கொள்ளும் தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் இஸ்ரேல் தூதரகத்துடனான தொடர்பைத்
துண்டிக்கும் படி விடுக்கப்பட்ட வேண்டுகோளை அரசாங்கம் புறக்கணித்துள்ளது.
பலஸ்தீனுக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டை
தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும், அந்நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில்
கைவைக்கும் நடவடிக்கையில் ஈடுபடப் போவதில்லையெனவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக
அரசாங்க உயர் வட்டாரங்களை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகமொன்று இன்று தெரிவித்தது.
இந்திய அரசாங்கமும் இஸ்ரேலுடன் தொடர்பைத்
துண்டிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்கோளைப் புறக்கணித்துள்ளதாகவும் அரசாங்கம்
சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை அரசாங்கம்
இஸ்ரேலுடன் உள்ள தூதரக உறவைத் துண்டித்ததனால் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்
கொடுக்க நேர்ந்தது.
வன்னி யுத்தத்துக்குத் தேவையான டோரா படகுகள், யுத்தக் கப்பல்கள், ராடர் படகுகள் மற்றும் கபீர் விமானங்கள்
என்பனவற்றை இலங்கைக்கு வழங்கி உதவியதும் இஸ்ரேலே எனவும் அரசாங்க உயர் மட்ட
செய்திகள் மேலும் தெரிவித்துள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் அறிவித்தது-dailyceylon
Tags
இலங்கை