புதிய துருக்கிப் பிரதமர் அஹ்மத் தாவுத் ஒக்லோ


(Imthiyaz Iium)

பிறப்பு -1959 
துருக்கியின் தாஷ்கந்த் என்ற பகுதியில் பிறந்தவர்.
தந்தை : முஹம்மத் தாவுத் ஓக்லோ வியாபாரி
தாய் : மைமூனா இல்லத்தரிசி (அஹ்மத் தாவுத் ஒக்லோவின் நான்காம் வயதில் வபாத்தனார்கள்)

நான்காம் வகுப்பு வரை இஸ்தான்புளில் இருக்கும் ஹாஜ் சுலைமான் பெக்பாடசாலையில் கல்வி கற்றார் 

அதன் பிறகான ஆரம்ப கல்வியை பஹஷ்லீ பகுதியில் ஒரு பாடசாலையில் கற்றார்.

உயர்தரக் கல்வியை இஸ்தான்புளில் உள்ள ஆண்கள் பாடசாலையில் பெற்றார் .
பின்னர் இஸ்தான்புல் பொஸ்பூர் பல்கலைக் கழகத்தில் நிர்வாகம் மற்றும் பொருளாதார பீடத்தில் இணைந்து கல்வியைத் தொடர்ந்தார்.

1983 – 1984 கல்வியாண்டில் பட்டம் பெற்று வெளியேறினார்.

முதுமாணிப் பட்டத்தை பொது நிர்வாகத் துறையிலும், கலாநிதிப் பட்டத்தை அரசியல் மற்றும் சர்வதேச துறையில் அதே பல்கலைக் கழகத்தில் பெற்றார்.

1990 இல் மலேசியா சர்வதேச பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்கள். 1993 இல் அரசியல் கற்கைகளுக்கான பகுதி ஏற்படுத்தப்பட்டு அதற்கு தலைவராக நியமிக்கப்பட்டார்கள்.

1995 – 1999 காலப்பகுதியில் இஸ்தான்புளில் உள்ள மர்மரா பல்கலைக் கழகத்தில் சர்வதேச தொடர்புகள் கற்கைகளில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்கள்.

அரபு, ஜெர்மனி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றவர். 

துருக்கிப் பிரதமராக ரஜப் தய்யிப் அர்துகான் சேவையாற்றிய போது துருக்கி வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். அதுபோல நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் பிரதித் தலைவராக இருந்தார்கள்.

1984 இல் மகப்பேற்று பெண் வைத்தியர் டாக்டர் சாராவை திருமணம் செய்தார்கள். நான்கு பிள்ளைகள் (மைமூனா , ஹாஜர் பூகாஹ்,சய்பூராஹ்,முஹம்மத்.)

2014 ஜனாதிபதி தேர்தலில் அர்துகானின் வெற்றிக்குப் பின்னர் பிரதமராக நியமிக்கப்பட்டதுடன் , நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

புத்தகங்கள் :

1- பதிலீட்டு முன்னுதாரணங்கள் : அரசியல் கோட்பாட்டில் இஸ்லாம் மற்றும் மேற்கின் பாதிப்பு.(ஆங்கிலம்) 1993
2- நாகரிக மாற்றமும் இஸ்லாமிய உலகமும் (அரபு) 1994
3- இருபதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய அரசியலை மீள எழுதுதல்.2000 
4- மூலோபாய அடிப்படைகள்.: துருக்கியின் அமைவிடமும் சர்வதேச மட்டத்தில் அதன் வகிபங்கும் . (அரபு) 2001
5- சர்வதேச தேக்கம் (துருக்கி ) 2002
6- உஸ்மானியா நாகரிகம் : கலைகளுக்கான அரசியல் பொருளாதாரம்.(துருக்கி) 2005
7- கோட்பாட்டிலிருந்து நடைமுறைக்கு : துருக்கிய வெளிவிவகார அரசியல் பற்றிய கருத்தாடல்கள். (துருக்கி) 2013


Post a Comment

Previous Post Next Post

Contact Form