(Mohideen Ahamed Lebbe)
இரண்டாம் நூற்றாண்டில் இலங்கையுடன் அராபியர்கள் முதன் முதலில் தொடர்பை ஏற்படுத்தினார்கள் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ள அதே வேளை கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இலங்கையில் இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எமது அயல் நாடான இந்தியாவை வந்து பிடித்து கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் ஆட்சிசெய்த முஸ்லிம்கள் இலங்கையை பிடிப்பதற்கு ஒரு பெரிய சவால் இருக்க வில்லை.
அதே வேளை எமது அழகிய தேசத்தை காலனித்துவம் செய்து அதன் இயற்கை வளங்களையும், மக்களையும் சுரண்டி வாழ்ந்த போத்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களை விரட்டியடிப்பதில் முன்னின்று உழைத்து நாட்டின் முன்னேற்றத்தில் என்றும் பங்களிப்பு வழங்கி வந்துள்ள முஸ்லிம்களது வாழ்கை முறை குறித்து ஏற்பட்டுள்ள சந்தேகம் தற்பொழுதும் அதே மேற்கின் வாழ்கை முறைக்கு இரையான, அதன் அரசியல் முறையை பின்பற்றி தற்பொழுது இறைமையை தேசத்தின் இழந்துள்ள இலங்கையின் நிலைப்பாடு குறித்து சிந்திக்க தவறியுள்ளது பொதுபல சேனா. மேற்கினது பொறிக்குள் அகப்பட்டு பௌத்மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டி முஸ்லிம்களது உடைமைகளையும் சொத்துக்களையும் முடக்கி முஸ்லிம்களை கருவறுக்க நினைக்கிறது. இதற்கான பகிரங்க வேலைத்திட்டங்களையும் பிரச்சாரபணிகளையும் அரச அனுசரணையுடன் முடுக்கிவிட்டுள்ளது.
இதுகுறித்து ஒவ்வொரு முஸ்லிமும் சிந்தித்து தமது சக பௌத்த நண்பர்களுடன் கருத்தாடல்களை முன்னெடுத்து பொதுபலசேனாவின் இனவாத நியாயமற்ற போக்கை கண்டிக்கும் செயலைத் தூண்டவேண்டியுள்ளது. அத்துடன் இஸ்லாம்பற்றிய தெளிவையும் முஸ்லிம்கள் பற்றிய சந்தேகங்களையும் களைய உழைக்க வேண்டியுள்ளது. குறிப்பாக இக்கருத்துக்கள் பலமட்டங்களில் விரிவாகப் பேசப்படவேண்டும். அதற்கான சிந்தனா ரீதியான கருத்தியல் முன்னெடுப்புக்களை முஸ்லிம் புத்தி ஜீவிகள் எடுக்க வேண்டும்.
Tags
இலங்கை