முன்னதாக 72 மணி நேர போர்நிறுத்தம் காசாவில் அமலுக்கு
வந்திருந்தது. மோதலில் ஈடுபடும் இஸ்ரேலிய இராணுவமும் ஹமாஸும் தமது படைகள்
தாக்குதலில் ஈடுபடுவதை நிறுத்திவைத்திருந்தனர்.
ஆனாலும் காசாவுக்கும்
இஸ்ரேலுக்கும் இடையிலான எல்லையில் உள்ள சுரங்கங்களை அழிக்கும் நடவடிக்கை நிறுத்தப்படாமல்
தொடர்ந்து நடக்கவே செய்யம் என கூறி தாக்குதல்களை மீண்டும் ஆரம்பித்தது இஸ்ரேலிய
இராணுவம்.
ஆனால் இந்த போர்நிறுத்தம்
மிகவும் பலவீனமானது என்பது ஏற்கனவே நிரூபனமாகியிருந்தது, ஏனென்றால் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட
பின்னர் ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய ஒரு தாக்குதலில் பாலஸ்தீனர்கள் நால்வர்
கொல்லப்பட்டிருந்தும் பலர் காயமடைந்தும் இருந்தனர்.
போர்நிறுத்தம்
ஆரம்பிப்பதற்கு முன்பாக இஸ்ரேல் நேற்றிரவு நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 14 பேர் கொல்லப்பட்டிருந்தனர். நேற்று பாலஸ்தீன ஆயுததாரிகள் வீசிய மோர்டார்
குண்டில் சிக்கி இஸ்ரேலிய சிப்பாய்கள் 5 பேர்
கொல்லப்பட்டிருந்தனர்.
சென்ற மாதம் 8ஆம் தேதி ஆரம்பித்திருந்த இந்த மோதல்களில்
சிவிலியன்கள் பெரும்பான்மையாக இதுவரை 1400க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய தரப்பில் 63 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
-BBC
Tags
உலகம்