(Mohideen
Ahamed Lebbe)
இன்றுள்ள முதலாளித்துவ
சடவாதச் கொள்கையில் வடிவமைக்கப்பட்டுள்ள உலக ஒழுங்கானது முஸ்லிம் இளைஞர்களை
சுயநலமுள்ளவர்களாக மாற்றிவருகின்ற வேளையில் இளைஞர்களை பொதுநலமுள்ளவர்களாக
மாற்றுவதற்கு இளைஞர்களை இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் நெறிப்படுத்தி
இஸ்லாத்திற்கு அன்னியமான இன்றைய முதலாளித்துவ மதஒதுக்கல் கொள்கையின்
ஆபத்துபற்றியும் அது எவ்வாறு ஒரு முஸ்லிமின் ஈமானுக்கு அச்சுறுத்தலாது
என்பதுபற்றியும் தெளிவுபடுத்தி இன்றைய முஸ்லிம் இளைஞர்களை நெறிப்படுத்த
வேண்டியுள்ளது.
இவ்வாறு முஸ்லிம் இளைஞர்களை நெறிப்படுத்தும் போது
அவர்களிடம் உள்ள இயங்கு சக்தியும் துடிதுடிப்பும் அர்பணிப்பும் சமூக எழுச்சியிலும்
இஸ்லாமிய மறுமலர்ச்சியிலும் பாரிய பங்களிப்பை வழங்கி வருவதனை நாம் கண்கூடாக
கணமுடிகிது. இதனை அரபு வசந்தம் முதல் அளுத்கமை வரையிலும் நாம் காணலாம்.