காஸாவில்
நடத்திவரும் தாக்குதலின் மூலம் இஸ்ரேல் ஹிட்லரை மிஞ்சிவிட்டதாக
துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் வெளியிட்ட அறிக்கையை
கண்டித்து துருக்கி நாட்டுப்பொருட்களுக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளது.
பிரபல
சூப்பர் மார்க்கெட்டுகளில் துருக்கிப் பொருட்கள் விலக்கப்பட்டுள்ளது. துருக்கியில்
இஸ்ரேல் நிறுவனங்களின் தயாரிப்புகளையும் புறக்கணிக்கப்போவதாக
பிரபல சூப்பர் மார்க்கெட் நெட்வர்க்கான சூப்பர்சோல் உள்ளிட்டவைகள்
தெரிவித்துள்ளன.
நேற்று
முன் தினம் இஸ்ரேலின் கொடிய தாக்குதல்களை கண்டித்த துருக்கி பிரதமர்
எர்துகான், இஸ்ரேலை ஹிட்லருடன் ஒப்பிட்டார்.
இதற்கு பதிலளித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, எர்துகானின்
அறிக்கை, யூதர்களுக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளான்