இஸ்ரேலுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள பிரேரணை நிறைவேற்றம், அமெரிக்கா எதிர்ப்பு



ஜெனீவா: காஸா போராளிகளை தாக்குகின்றோம் என்ற பின்னணியில் காஸாவில் அப்பாவி பொதுமக்களை கொலைசெய்துவரும் இஸ்ரேலுக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் 3 வாரங்களாகத் தொடரும் காஸா மீதான தாக்குதல்களில் உலக யுத்தத்திற்கான விதிமுறைகளை இஸ்ரேல் தொடர்ந்தும் மீறி வருகின்றனது. இதன்காரணமாக காஸாவில் இஸ்ரேலால் கொல்லப்பட்டவர்களுள் அதிகமானவர்கள் சிறுவர்களும், பொதுமக்களுமே எனவும் நவி பிள்ளை மேலும் தெரிவித்தார்.
காஸாவில் கொல்லப்பட்டவர்களுள் 74 வீதமானவர்கள் சிவிலியன்கள் என்பதை ஐ.நா ஒப்புக்கொண்டிருக்கிறது.

பலஸ்தீன், காஸா பகுதியில் மனித உரிமைகளை மீறும் வகையில் இஸ்ரேல் செயற்பட்டுள்ளதா என்பதை ஆராய்வதற்காக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனினும் இந்த பிரேரணைக்கு அமெரிக்க மாத்திரம் பாரிய எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. காஸா பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட அமர்வு ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறறது.

இதன்போது காஸாவில் இஸ்ரேலிய இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அத்துடன் குறித்த தாக்குதல் மனித உரிமைகளை மீறும் வகையில் அமையப் பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனால் காஸாவில் இடம்பெறும் தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

எனினும் இதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் எதிர்ப்பு வெளியிட்டன. இதற்கு மத்தியில் காஸாவில் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்காக பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா, பாகிஸ்தான், பிரேஸில், ஆர்ஜன்டீனா, சீனா, எதியோப்பியா, கென்யா, மாலைதீவு, கஸகஸ்தான், குவைத், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் தென்னாபிரிக்கா உட்பட 29 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. ஆனால் அமெரிக்கா மாத்திரம் இந்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன.

எனினும் பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் உட்பட 18 நாடுகள் இந்த பிரேரணைக்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, காஸாவின் மீது தற்போது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் இஸ்ரேல் போர்க் குற்றங்களை இழைத்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை தெரிவித்தார்.

இந்த மோதல்களின்போது, பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க போதிய முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டன என்று இஸ்ரேல் கூறுவது தொடர்பில் சந்தேகங்கள் உள்ளன என்று நவி பிள்ளை கூறினார்.

ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை மேற்கோள்காட்டியுள்ள அவர் அது சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் எந்த அளவுக்கு துச்சமாக மதிக்கப்பட்டன என்பதை அதிர்ச்சியளிக்கக் கூடிய வகையில் வெளிக்காட்டியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.அந்தத் தாக்குதலில், காஸாவின் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த ஏழு சிறார்கள் இலக்குவைத்து தாக்கப்பட்டது என நவி பிள்ளை தெரிவித்தார்.

அதேநேரம், ஹமாஸ் நடத்தும் ராக்கெட் வீச்சுக்களையும் அவர் கண்டித்துள்ளார். நவி பிள்ளையின் கருத்துகள் முற்றாக ஆராயாமல் வெளியிடப்பட்டுள்ள கருத்துகள் என்று கூறியுள்ள இஸ்ரேலியப் பிரதிநிதி, தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

காஸா நிலப்பரப்பின் தென் பகுதியில், இஸ்ரேல் தொடந்து தாக்குதல்களை நடத்தி வருவதால்இ அங்கு வாழும் பாலஸ்தீனர்கள் பீதியோடு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இஸ்ரேலிய எல்லையை ஒட்டியுள்ள நகரமான கூசாவிலிருந்து மற்றும் 4000 பேர் வெளியேறியுள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Post a Comment

Previous Post Next Post

Contact Form