பொதுபல சேனா அமைப்பின்
செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோரின்
முகநூல் (பேஸ்புக்) கணக்குகளைத் தடை செய்யுமாறு 24
மணித்தியாலங்களுக்குள் 12 இலட்சம் வேண்டுகோள்கள் அமெரிக்காவிலுள்ள முகநூல்
நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
பொதுபல சேனாவின் முகநூலினை
தடைசெய்யுமாறு கோரி சுமார் 50
இலட்சம் முறைப்பாடுகள்
செய்யப்பட்டிருந்தன. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள
கலகொடஅத்தே ஞானசார தேரர்,
பங்களாதேஷ் மற்றும்
பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோருடன் அடிப்படைவாதிகள் ஒன்றிணைந்தே இந்தக் காரியத்தைச்
செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
தமிழில் ஏ.எச்.சித்தீக்
காரியப்பர்
சிங்களத்தில் ஷகீலா
ராஜபக்ஷ (ரிவிர)
Tags
இலங்கை