ஹமாஸின் பதிலடி தீவிரம்: 27 இஸ்ரேலிய ராணுவத்தினர் மரணம்


டெல் அவீவ்: தரைப்போரை துவக்கிய பிறகு ஆபீஸர் உள்பட 27 இஸ்ரேலிய ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவத்தினரை மேற்கோள்காட்டி அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளையில் இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஃபலஸ்தீன் போராளி இயக்கங்கள் ராக்கெட் தாக்குதலை தொடருகின்றன. திங்கள் கிழமை அல்-கஸ்ஸாம் போராளிகளுடன் நடந்த மோதலில் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் 7 பேர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் உறுதிச் செய்துள்ளது. 
பைத் ஹானூனில் இஸ்ரேலுக்கு கடுமையான இழப்பை ஃபலஸ்தீன் போராளிகள் ஏற்படுத்தியதாக அல்கஸ்ஸாம் தெரிவித்துள்ளது. டெல் அவீவில் ராக்கெட்டை ஏவியதாகவும் அல்-கஸ்ஸாம் தெரிவித்தது. 
நன்றி- thoothuonline


Post a Comment

Previous Post Next Post

Contact Form